பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் இவர் உபதேசமும் இன்றியமையாததுகொல் ! எளிய நடையாவது இலக்கணப் பிழையின்றித் திரிசொற்கள் பெரிதும் விரவாமல் இயற்சொற்களால் இயல்வதாகும். இவ்வெளிய நடையையும், திரிசொற்கள் பெரிதும் விரவிய அரிய நடையையும், எழுதப்படும் பொருள்க ளுக்கு ஏற்றவாறு புலவர்கள் பகுத்துணர்ந்து மேற் கொள்ளல் வேண்டும். 21 5. இனிச் செய்யவேண்டுவன. (1) நூல்கள், ஆராய்ச்சிகள் முதலியன பல இனி, நம் அருந்தமிழ் நன்னிலைப் படுதற்குச்செயற் பால காரியங்களைச் சுருக்கிக் கூறுவேன். உலகத்து வழங்கும் பல மொழிகளிலும் உள்ள அரிய கலைகளெல்லாம் தமிழ் மொழியில் வரல் வேண்டும். ஆங்கில மொழியிலும் வட மொழியிலுமிருந்து மொழி பெயர்க்க வேண்டிய சிறந்த நூல்கள் பலவுள்ளன. உயிர்த் தொகுதிகளைப்பற்றினவும் மற்றை நிலையியற் பொருள்களைப்பற்றினவுமாகிய நூல்களும், இரசா யனம் முதலிய செயற்குப் பயன்படும் நூல்களும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப் படல்வேண்டும். மேலைத் தேயத்துப் பண்டிதர்கள் தம் பேருழைப்பாற் புதிய முறையிற் கண்ட சிறந்த ஆராய்ச்சி நூல்க ளெல்லாம் ஒவ்வொன்றாகத் தமிழில் வெளிப்படல் வேண்டும். இதற்கு ஆங்கிலமும் தமிழும் உடன்கற்ற புலவர்கள் துணைபுரிய வேண்டும். வடமொழியினின்று மொழி பெயர்க்க வேண்டிய மூலநூல்கள் பலவுள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாக