பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நம் தேசத்தாராற் பிரமாண நூல்களாக மேற் கொள்ளப்பட்டுவரும் இருக்கு முதலிய வேதங்களும், அவற்றின் முடிபொருளாக விளங்கும் உபநிடதங் களும், தமிழ் நிலத்தார் வாழ்க்கைக்கு இன்றியமையாச் சிறப்பு நூல்களாகவுள்ள ஆகமங்களும் ஆகிய இன்னோரன்ன மூலநூல்கள் எத்துணை ஆயிரம் ஆண்டுகளாகியும் இன்னுந் தமிழிற் செவ்விய முறை யில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவரவில்லை. ஒரோ விடங்களிற் சிலர் இவற்றை மொழிபெயாக்கத் தலைப்பட்டுச் செவ்விய முறையிற் பயன்பட இயற்ற லாற்றாது இடைக்கண் ஒழிந்தனர். அவர் அத்துணை தானும் முயன்றதுபற்றிப் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம். அவர்க்குத் துணை புரிவாரும் இல்லை. எவ்வாறு வெளிப்படுத்தினாற் பயன்படுமென்பதைத் தெரிந்துகொள்ள அவர் முயலவுமில்லை. எத்துணையோ ஆயிரங் காவத தூரங்களுக்கு அப்பாலுள்ள ஆங்கில தேயத்தார் தம் மொழிகளில் இவ்வரிய வேதாகம உபகிடதங்களைப் பொருட்படுத்தி மொழிபெயர்த்துப் பலவகைச் சிறந்த ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் வெளிப்படுத்தி யிருக்கின்றனர். தொன்றுதொட்டு ஒற்றுமையோடு வழங்கப்பட்டுவரும் நம் தமிழ் மொழியில் இதுகாறும் அவை வெளிவராமை ஒரு குறையேயாம். தெளிவான தமிழ் உரைநடையிற் பல்வகை ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் அவை வெளி வரல் வேண்டும். உரைநடைக் கோவை மூல நூல்கள் உள்ளவாறு வெளிவந்த பின் அவற் றின் நலந் தீங்குகளைப்பற்றி ஆராய்வார் மூலம் முற்றும் தமிழில் வருவதற்குமுன், அவற்றின் ஆராய்நி,