பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 உரைஈடைக் கோவை யாகும். புறநானூற்றை ஆராய்வோமாயின், புலவர் வறுமைத் துன்பம் பல வெளியாம். பெருஞ்சித்திரனா ரென்னும் புலவர் பெருமான் குமணவள்ளலை நோக்கி, "வாழு நாளோ டியாண்டு பலவாக எனத் தொடங்கிக் கூறிய பாட்டில், தம் தாய், மனைவி, குழந்தைகள், சுற்றத்தாராகிய இவர்கள் பசியால் வருந்துதலைக் கூறும் பகுதிகள் கன்னெஞ்சையுங் கரைப்பன அல்லவோ ! ஆனால், இவர் வருத்தங் கண்டு அக்காலத்து வள்ளல்கள் இவர்களை எவ்வாறு பேணினர் என்பதற்கு அக்குமண வள்ளல் வரலாறு ஒன்றே போதிய உண்மையாகவே தம்மைப் பாடிவந்த சான்றாகும். புலவர்க்கு உயிரையும் வழங்க ஒருப்பட்டவரல்லரோ நம் தமிழ் வள்ளல்! ஆ! ஆ! அவர் கொடைக் குணத்தை என்னென்று கூறுவேன்! உள்ள பொரு ளெல்லாம் புலவர்க்கீந்து உடன் பிறந்தார்க்கு அஞ்சிக் காடுறைகாலைத் "தலை கொடு வருவார்க்கு ஆயிரம் பொன் தருவேன்" எனப் பறைசாற்றிய தம்பியார் செயலை அன்புடையார் சிலர் நம் வள்ளற் பெருமானுக்கு மறைவிற் கூற, அதுகேட்ட ஞான்று அவ் வள்ளலார் முகம் மேற்கொண்ட மலர்ச்சி, அரசியல் முடி சூடத் தொடங்குங்கால் மந்தரை சூழ்ச்சியால் வனம் போக்க முயன்ற கைகேயியின் கடுஞ்சொற்கேட்டு, "அப்பொழு தலர்ந்த செந்தாமரையினை" வென்ற இராமபிரான் முகமலர்ச்சியினும் விழுமியதன்றே ! இராமபிரானுக்கு நாடு நீங்குதலும் குமண வள்ளலுக்கு உடல் நீங்குதலும் அம் மலர்ச்சிக்குக் காரணங்களானமை ஈண்டுக் கருதற் பாலது. அவ் வள்ளல் தன் மகிழ்ச்சிக்குக் காரணமாகக் கருதியது, இறந்தஞான்று பெற்ற தாயும் பிணமென 66