பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் 29 வெறுக்கச் சீயோடு புழுவும் மண்ணும் சேரும் இச் சென்னிக்கு ஓராயிரம் பொன் விலை மதித்தனன் என் அருமைத் தம்பி " என்பதேயாகும். இங்ஙனம் தம் உயிரையும் புலவர் பொருட்டு வழங்க ஒருப்பட்ட வள் ளல்கள் வாழ்ந்த காலத்துப் புலவர் வறுமை நெடிது நில்லா தொழிந்திருக்குமென்பது கூறவேண்டா. புல வர் மாட்டு வள்ளல்கள் வைத்த மதிப்பிற்கோர் எல்லை யில்லை. எத்துணை வறுமை நேரினும் மதிப்பிலார் தரும் பரிசிலைப் பெறுதற்கு அக்காலத்துப் புலவர் ஒருப்படுத் லும் இல்லை. இதனால், வறுமை முதலியவற்றைக் கரு தித் தம் தகுதியினின்றும் இழிதலாகா தென்பதைப் புல வர்கள் இன்றியமையாது போற்றிக் கோடல் வேண்டு மென்பது போதரும். வருந்தியும் தங் கடமையைச் செய்தல் வேண்டும். கற்றல் பொருள் பெறுவதற்கன்று; அறிவைப் பெருக்கி அதனால் இன்பம் நுகர்தற்கேயாம். புலவர் கருத்து இவ்வாறாதல் வேண்டும். புரப்பார் கருத்துப் பொருட்கொடையிற் செல்லல் வேண்டும். புலவர்களைப் பாதுகாத்து அவர் செந்நாவாற் பாராட்டப்படுத்தலினும் செல்வர் பெறும் பேறு வேறு யாதுளது? காலத்தாற் கவரப்பட்ட செல்வருட் புக ழுடம்பு கொண்டு இன்றும் நம்மோடு அளவளாவி இன்புறுவார், புலவர் பாடும் புகழ் படைத்தாரன்றே! கற்றவர்க்கு ஈத்துவக்கும் பேறில்லாதார், செல்வம் படைத்தும் ஒளியும் புகழும் இலராய் விலங்கோடு ஒப்ப உண்டுகளித்துத் துஞ்சும் இயல்பினரேயாவர்.