பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 உரைாடைக் கோவை ஆதலாற் செல்வர்களே ! புலவரைப் போற்றுதல் நும் மைப் போற்றுதலாகும். ஆதலின், தமிழ் நலங் கருதி இன்னோரன்ன துறையில் இறங்குமின்கள் ! செல்வம் படைத்த ஞான்றே புலவர் பக்கலிருக்க விழைமின்கள்! பற்பலவாற்றானுஞ் செலவழிக்கப்படும் நும் பொருட் கூறுகளுள் ஒன்று புலவர்க்கெனச் செய்மின்கள் / அவிச்சுவையினும் இனிய கவிச்சுவையை நுகர்மின் கள்! நும் பூதவுடல் வன்மையுற்றிருக்கும் ஞான்றே புகழுடலின் ஆக்கத்திற்கு வேண்டுவன புரிமின்கள் அழிதன் மாலையதாகிய செல்வத்தைக் கொண்டு அழி யாப் புகழை வளர்த்தற்குரிய நெறியைப் பற்றுமின்கள்! புகழொன்றோ? வலவனேவா வானவூர்தி யெய்துத லாகிய புண் யப் பயனும் நுங்கட்காம். '"அர்ச்சனை பாட்டே யாகுமாதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார்' என்று அருண்மொழித் தேவரும், "தித்திக்கு மணிவார்த்தை இன்னுஞ் சின்னாள் திருச்செவியில் அருந்தவும் " என்று பரஞ்சோதி முனிவரும் கூறியாங்கு, மறை பாடும் பெரும் புலமையும், பொன் மலை வெள்ளி மலைக ளாகிய பெரும் பொருளும் வாய்க்கப்பெற்று எவ்வுயிர்க் கும் உயிராக விளங்கும் பரமபதியாகிய இறைவரே சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் முதலிய அருட் புலவர் திருப்பாடல்களைக் கேட்க விழைந்தன ரென்றால், அவரால் இயக்கமுறும் நாம் புலவர் பாட்டில் அவாவுறாதிருத்தல் எங்ஙனம் அமையும்?