பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் 31 (3) சங்கங்கள், கல்லூரி முதலியன இனி, இக்காலத்துத் தமிழ் புரப்பான் எழுந்த சங்கங்கள் கல்லூரிகளைப் பற்றிச் சிறிது கூறுவேன். தமிழ் வளர்த்தலையே பெரு நோக்கமாகக் கொண்டு எழுந்த சங்கங்கள் பலவற்றுள் மதுரைத் தமிழ்ச் சங்க. மும், இக் கரந்தைத் தமிழ்ச் சங்கமும், நகரங்களி. லும் பிறவூர்களிலுந் தோன்றிய சங்கங்கள் பலவற்றுட் சிலவுமே இயன்றவரை தம் கடமையைப் புரிந்து வரு கின்றன. இற்றைக்கு இருபத்துமூன்று யாண்டுகளுக்கு முன்னர் ஓர் உத்தமரின் தூய எண்ணத்தில் அரும்பி அதன் பயனாக இதுகாறும் செவ்வி குலையாது பாது காக்குந் துணைவரைப் பெற்று விளங்கும் மதுரைத் தமிழ்ச் சங்கம், மாணாக்கர் பலருக்கு உணவு கொடுத் துத் தமிழ் கற்பித்து, தேர்ச்சி பெற்றார்க்குத் தகுதிப் பத்திரமும் ஓரளவு பொற்பரிசும் உதவி, தனித்தமிழ்க் கல்விக்கு வரம்பிட்டு வளர்த்து வருஞ் செய்தி பாராட் டத்தக்கதே. இன்னும் அது தன் நோக்கங்களெல்லா வற்றையும் முற்ற நிறைவேற்றுவதற்குப் பொருளாளர் உதவியை வேண்டி நிற்கின்றது. இக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நிலையை இறுதி யிற் கூறுவேன். எம்மனோர் நகரங்களில் முளைத்த சங்கங்களிற் பல சில ஆண்டுகளாகக் கண்விழிப்பதும் உறங்குவதுமாகக் காலத்தைக் கழிக்கின்றன. பொருட்குறை நேராதே யென்று நீங்கள் நினைக்கக்கூடும். அன்பில்வழிப் பொரு ளிருந்தும் அது நற்காரியத்தில் எங்ஙனம் பொருந்தும்?