பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைாடைக் கோவை எம் தனவைசியர் கணக்கற்ற பொருளைப் பல்யாண்டு களாக இவ் விந்திய தேயத்திலுள்ள சைவ வைணவ ஆலயங்களுக்குச் செலவிட்டிருக்கின்றனர். தெய்வ பக்தியை மக்களுக்கு உண்டாக்குதற்கு இவ்வறங்கள் பயன்படுவன வெனினும், அதற்கு இன்றியமையாச் சாதனமாகிய கலவியையன்றே முதன்மையாக வைத் துப் போற்றல் வேண்டும்? சில ஆண்டுகளுக்கு முன் வரை வடமொழி வேதபாடசாலைகளுக்கும், வடமொழிக் கல்லூரிகளுக்கும், பெருஞ் சோற்றில்லங்களுக்கும் பொருளை வாரி இறைத்து வந்தனர். சின்னாளாக ஆங்கிலக் கல்லூரிகளுக்கும் வழங்கத் தலைப்பட்டு வருகின்றனர். இவ் விருதிறத்திலும் செலவிடப்பட்ட பொருட் கூறுகளில் ஒரு சிறு பகுதியேனுங் கொண்டு நம் அருமைச் செந்தமிழ்த் தெய்வத்திற்குத் திருக்கோயி லமைத்திலர்; தமிழ்த் தெய்வத்தை வழிபடும் மாணாக் கர்களுக்குப் பெருஞ் சோற்றில்லங்கள் அமைத்திலர். இக் குறையை யெடுத்து அன்பர்கள் பலர் அடுத்தடுத் துக் கூறிவந்ததன் பயனாக இப்பொழுது எம்மவர் நகரங்கள் சிலவற்றில் தமிழ்த் செய்வத் திருக்கோயில் கள் அமைத்து, தமிழ்ப் பிள்ளைகளுக்கு ஓர் அளவு கல்வி கற்பிக்கத் தொடங்கியிருக்கின்றனர். அக்கல்வி யும் உயர்தர நிலையில் இன்னும் பயிற்றப்படவில்லை. 32 பல்யாண்டுகளாக வடமொழி வேத சாத்திர பாட சாலைகளுக்குப் பொருள் செலவழித்த முறையில் தமிழ் மொழி வளர்ச்சி குறித்துச் செலவிடாமைக்குக் காரணம் இதன் பெருமையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லு வாரில்லாமையும், யாரேனும் தமிழ்ச்சுவை யுணர்ந்தார்