பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழும் தமிழ்ப் பணியும் வரு உதவித் தமிழ் நிலத்தாரை மிகவும் இன்புறுத்தி கின்றது. வேற்றுமொழிப் பயிற்சியால் வெதும்பிய அன் பர்கள் இப் பொழிலை அடைவார்களாயின் அவ்வெப்பம் ஒழியப் பெற்றுச் செந்தமிழ்த் தட்பத்தால் இன்புறுதல் ஒருதலை. 37 இன்னோரன்ன அருஞ் செயல்களை மேற்கொண்ட இச்சங்கத்தின் வேலையோ மிகப் பெரிது. இதற்குத் துணைக் கருவியாகவுள்ள பொருள் வருவாயோ மிகச் சுருக்கம். இச்சங்கத்தின் அருமைத் தலைவராகிய திரு வாளர் உமாமேகசுவரம் பிள்ளையவர்களும், ஏனை அன் பர்களும் ஆண்டுதோறும் உதவிவரும் பொருளைக் கொண்டே இஃது இத்துணை அரிய வேலை ஆற்றி வரு கின்றது. இங்ஙனம் ஆண்டுதோறும் பலரிடத்தினின் றும் சிறிது சிறிதாகத் தொகுக்கப்படும் பொருளைக் கொண்டு இப் பணி நடைபெறுதல் ஒருவகையில் எல் லோரன்பிற்கும் இது நிலைக்களனாதலைப் புலப்படுத்து மாயினும், இங்ஙனமே கடைபோக இயற்றுதல் அரிதாக லான் இதற்குத் தக்க பெரும்பொருள் மூலதனமாகத் தொகுத்தமைத்தல் இன்றியமையாத தாகும். பண்டைக் காலத்துப் பெரும் புலவர்களை யெல்லாம் பொருட் கொடையாலும் பிறவற்றாலும் தம் உயிரினுஞ் சிறப்பப் போற்றிவந்த சோழ மன்னர்கள் வாழ்ந்த நாடன்றோ இது! செந்தமிழ்க் கல்வியைச் சைவ சமயத் தோடு வழங்குதற்கு எழுந்த சைவமடங்கள் பல விளங் கப் பெறுகின்றதும் இந் நாடன்றோ!அம்மடங்கள் பண்டு செய்த தமிழ்ப்பணிகள் அளவில்லாதனவாகும். அம்மடங்களில் விளங்கிய சைவ சீலர்களாகிய அத்