பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கோவை துறவறச் செல்வர்களால் வெளிப்பட்ட செய்யுணூல்கள் எத்தனை ! சிறந்த உரைநூல்கள் எத்தனை ! அவர் பாற் கசடறப் பயின்றார் எத்துணையர்! அம்மடங்களுக் குத் தலைவராக இற்றைஞான்றுள்ளார் தம்முன்னையோர் போலத் தாமும் தமிழ்ப் பரிபாலனத்திற் றலைப்பட்டு இன்னோரன்ன தமிழ்ச் சங்கங்களுக்கும் உதவி புரிய லாமே! அவர்கள் இதனை உளங் கொள்ள அவர் உளத் துறை தெய்வத்தை யாம் வேண்டுதலேயன்றி வேறென் செய்யக்கடவோம்! மற்றை நாடுகள் யானைகளையும் முத்துகளையுமுடை யனவாக, மக்கட்கு இன்றியமையாச் சோற்றை மிக வுடையதன்றே இச்சோழ வளநாடு! இச்செல்வ நாட்டில் அருமருந்துபோல் தோன்றிய இச்சங்கத்தை அடுத்த மாணவர்க்குச் சோறிட்டுத் தமிழ் கற்பித்த லன்றே இந் நாட்டின் பெருமைக்கு ஏற்றதாகும்? இங் குள்ள பொருளாளர் மனங்கொள்வாராயின இஃது இயலாததொன்றோ? பிறமொழிக் கல்லூரிகளுக்கு ஒரு திங்கட்கு எத்தனை ஆயிரமேர் செலவாக, இச்செந் தமிழ்த் தாயின் திருக் கோயிற்குத் திங்களொன்றிற்கு ஓராயிரமேனும் பயன்படுத்தல் வேண்டாவா? இத் துணை வருவாயுள்ள மூலப் பொருள் தொகுத்தல் பெருங் காரியமா? தமிழ்க்கண் அன்புமிக்க திருவுடையீர்! நும் வாழ்நாளிற் பற்பல பகுதியாகச் செலவிடப் படும் பொருட் கூறுள் ஒன்று இதற்கெனத் தனிப்படுத் துதவ முன் வருவீராயின், இது நிறைவேறுதற்கு