பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 உரைநடைக் கோவை வுட்புறக் கருவிகளுக்கும் எட்டாது அப்பாற்பட்ட திருவருளாற்றலினது சீரிய நிலையின் ஒரு சிறு கூற்றினை யாதல் செவ்விய புலமை முயற்சியின் பயனாகிய மெய் யுணர்விற் கண்டு இன்புறுதற்கு முயலவேண்டும். அவ் வின்பப்பேறொன்றே நம் புலமை வாழ்க்கையில் அரி தின் முயன்று அடைதற்பாலதாகிய முடிந்த பயனாகும். முதற்கண் மன மொழி முதலிய உட்புறக் கருவிகள் செந்நிலையுறுதற் கமைந்த விழுமிய நூலறிவு, முடிவில் திருவருள் நிலையின் தெளிவு கைவரப் பெறுதற்குரிய சிறந்த கருவியாகிய மெய்யுணர்வைப் பயந்து நிறகும். அம்மெய்யுணர்வொன்றே தன் பயனாகிய உயர்வொப் பில்லாப் பேரின்பத்தை விளைவிப்பதாகும். உலக வாழ்க்கைபோலப் புலமை வாழ்க்கையும், இல் நிலை, துறவு நிலை என இருதிறப்பட்டு நிகழுமாறும் இக் குறிப்புக்களான் உணரலாம். கல்வியே கற்புடை மனைவியாகவும், செல்வப் புதல்வரே செழும் பாடலாக வும், கற்றதுணர விரித்துரைத்தலாகிய சொல்வளனே இந்நிலைக்கு வேண்டிய பொன்னிலையாகவுங் கொண்டு இல்லறப் புலமை வாழ்க்கையைச் செவ்வன் நடாத்திய செம்புலச் செல்வனொருவன். முடிவில் மெய்யுணர்வு கைவரப்பெற்று, அது வாயிலாகத் திருவருள் நிலையை யுணர்ந்து, அவ் வருள் நிலை இன்பத்தில் திளைப்பின், அந் நிலையே துறவறப் புலமை வாழ்க்கையாகும். உண் மைப் புலமையின் சிறந்த குறிக்கோள் இதுவேயாம். 2. புலவரும் புரவலரும் மிகச் சிறந்த இந்நிலைக்கு நம்மை ஆளாக்கும் இப்புலமைச் செல்வத்தை இவ்விழுமிய கோக்குடை