பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் புலமை யாராகவே நம் பெரியார் மேற்கொண்டிருந்தனர். அன்னார் குறிக்கோள் அன்னதாக, அவருக்கு இம்மை தலம் முட்டின்றி நடைபெறுதற்கு வேண்டும் பொருள் முதலியன கொடுத்துப் போற்றுதற்கு, வரையாதளிக் கும் வள்ளன்மை மிக்கார் பலரை அவ்வப்போது திரு வருளாற்றல் உதவி வந்தது. 49. சிறந்துயர்ந்த குறிக்கோ ளொன்றைக் கடைப் பிடித்துத் திருவருட் டுணைகொடு முயல்வார்க்கு, அதனை நிறைவேற்றுவிக்கும் இறையருள் இடைக்கண் வேண்டுவனவாகிய பிறவெல்லாம் பல்லாற்றானு முதவி அவரைத் தளரவிடாது அளித்துக் காக்கும் என்பது, நம் பெரியார் கண்ட உண்மை. புலமையின் குறிக் கோள் மிகச் சிறந்துயர்ந்த அறிவு வளர்ச்சியான் எய் தும் உலப்பிலா இன்பப் பேறாகவும் அதனை மறந்து, அழிதன் மாலையதாகிய குறுகிய உலக வின்பமே அது வெனக் கொள்ளப்படுமாயின், அது நிறைவேறுந் துணையும் அப் புலமை நின்று பின் வளர்தலின்றி ஒழியும் இயல்பினதாகும். அந் நிலையில் அமைந்த புலமையுஞ் சிறிதேயாகும். இற்றை ஞான்று கல்விபயிலும் மாணவர்கள் தொடக்கத்திற் கொள்ளும் நோக்கம், பெரும்பாலும் தம் வாணாளில் உடலோம்பலாகிய அவ்வளவிலேயே அமைந்துள தென்பது யாவரும் உணர்ந்த தொன்று. இக்குறுகிய நோக்கம் மேற்கொண்டு பயில் வோர் ஒரு வகையாகத் தேர்வில் வெற்றி பெற்ற பின்னர், அக் குறுகிய நோக்கமாகிய பொருட் பேறு நிறைவேறுதற்குரிய முயற்சியிற் றலைப்படுகின்றனரே யன்றிக் கற்ற கல்வியின் விழுமிய பயனைப் பெறு 4