பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

௩.நம் பண்டைய நீதி நூலாசிரியர்* மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் வண்ணம் நம் பெரியார் நமக்கு உதவிய நூல்கள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள்கள் நான்கனை யும் பற்றியனவேயாம். இவ் வெல்லாம் நீதியின்மேல் அமைவன் வெனினும், இவற்றுள் பொருட் பகுதியைப் பற்றி யெழுந்த நூல்களையே 'நீதிநூல்' எனப் பெரி யோர் வழங்குவர். அப்பொருட் பகுதியை மாத்திரம் சிறப்பாக எடுத்துக் கூறிய ஆசிரியரும் உளர். னோடு அறமுதலிய ஏனைய உறுதிப் பயன்களையும் இயைத்துக் கூறிய ஆசிரியர்களே பெரும்பான்மையோ ராவர். இம் முறையில் தமிழிற் சிறந்த நீதிகளை வழங் கிய வண்மையிற் சிறந்த பெரியார் திருவள்ளுவரே யாவர். அவர்க்கு முன்னும் பின்னும் நீதிநூ லருளிய ஆசிரியர்கள் வடமொழியிலும் தமிழிலும பலரிருந் தனர். எனினும், அன்னார் புகழொளி யெல்லாம் வானத்து விளங்கும் மீன்களாக, வள்ளுவர் சீர்த்தி திருச்சிராப்பள்ளி வானொலியிற் பேசியது