பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் பண்டையரீதி நூலாசிரியர் அப்பன்மீன் நடுவண் பான்மதிபோலத் திகழ்வதாகும். "எல்லாப் பொருளும் இதன் பாலுள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் என்றபதி உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் வள்ளுவர் வாய் மொழியிற் காணப்படுவளவேயாம். தம் தெள்ளிய கல்வியானும் ஒள்ளிய மதி நுட்பத்தானும் உலகியலை யும் மக்கள் வழக்க வொழுக்கங்களையும் அழுந்தி யறிந்து உள்ளத்தமைத்துத் 'திருக்குறள்' என்னும் நீதிக் களஞ்சியத்தை உலகமுள்ளவும் நிலை பெற யாத்துதவிய பெருமையே அப் பொய்யில் புலவர் புசு ழொளி விஞ்சுதற்கு ஏதுவாயிற்று. திருவள்ளுவர் எழுதிய நூல் ஒழுங்கிற்கும் ஏனை யோர் நூன் முறைக்கும் உள்ள வேறுபாடுகள் பலவாம். தாம் கூற மேற்கொண்ட பொருளை நன்றாக ஆராய்ந்து, இவ்வாறு தெளிவுபடுத்த, வேண்டுமென்று உள்ளத் தமைத்துப் பின்னர்ச் செய்யுள் வடிவில் இவர் வெளியிட்டுள்ளார். பெரும்பான்மையும் கொண்ட பொருளின் இலக்கணம், அதன் சிறப்பு, அதனாலாம் பயன், அஃதில்வழி வருந் தீங்கு என்று இன்னோரன்ன பாகுபாடுகளை வரையறுத்துக்கொண்டு கூறுதல் இவர் இயல்பு. எப்பொருட்கும் வரையறையும் தெளிவும் இன்றியமையாதன. வரையறுத்துத் தெளிவுபடுத் தப்படாத பொருள்கள் மக்கள் உளங்கோடற்கு ஏற் றனவாகா என்பது பெரியார் துணிபு. இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்குறளுக்கு வட மொழி தென் மொழிகளிலுள்ள பற்பல நீதி நூல்க ை 5