பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 உரைநடைக் கோவை யும் நன்கு கற்று ஆராய்ந்த பரிமேலழகர் என்னும் புலவர் பெருமான் இயற்றிய உரையே எல்லா உரை களினும் சிறந்ததாகப் போற்றப்படுவது. அவ்வுரை யாளர் ஓரிடத்து, " தேவாக்கும் அசுராக்கும் அமைச்சுப் பூண்ட வியாழ வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின்' என்று எழுதியிருத்தலால் வடமொழியிற் புகழ்மிக்கவர் களான வியாழ வெள்ளிகளின் நூற் கருத்துக்கள் நம் வள்ளுவா வாய்மொழியிற் புலப்படுகின்றன வென்பது பரிமேலழகர் கருத்தாம். ஒரு நாட்டினர் வழக்க வொழுக்கங்களை உணர்ந்து அவற்றிற் கேற்ப நீதிகளை வரையறுக்கும் ஆசிரியர்கள் கால இடையறவால் சேய் மைக்கண் உள்ளா ரெனினும், பொருள் ஒற்றுமைக் கருத்தால் அணிமையில் உள்ளவராகவே கருதப் படுவர். வடமொழியில் மனு முதலிய நூல்கள் அறம் பொருள் இன்பங்கள் விரவக் கூறப்பட்டுள்ளன. பொருட் பகுதியாகிய அரசியல் முறையைத் தனிமை பில் விளக்க எழுத்த நூல்களுள், பிருகற்பதியாகிய வியாழ குருவால் தேவர்கள் பொருட்டு இயற்றப்பட்ட பாற்கபத்தியமும். உசனஸ் என்னும் சுக்கிராச்சாரி யாரால் அசுரர் பொருட்டு இயற்றப்பட்ட ஔசநசமும் முதலில் நினைக்கத் தக்கனவாம். இவற்றின் பின் எழுக் தன சந்திரகுப்தன் காலத்து அமைச்சராக இருந்த சாணக்கியரால் ஆக்கப்பட்ட கௌடலியமும், காமாந் தீகனால் இயற்றப்பட்ட காமாந்தக முதலியனவும் ஆம். இவற்றுள் இக் காலத்துச் சட்டநூல் வல்லோராற்