பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 உரைஈடைக் கோவை சருள் தலைவராக்கினன். இவர்கள் மதி நுட்பம் நூலோடுடையராய் அமைச்சருள் தலைவராக வீற் றிருந்து, அறநிலை பேணித் தம் செயலாற்று நாளில், 'நானார், என்னுள்ளமார், ஞானங்களார்' என்று இன்னோரன்ன தத்துவ ஆராய்ச்சியில் தலைப்பட்டு, இருவினைக்கீடாகப் பிறந்து இறந்துழலும் உயிர்த் தொகுதிகளினியல்பும், அவ்வுயிர்களை வினைப்பயன் நுகர்வித்து அருள்புரியும் பரங் கருணைத் தடங்கட லாகிய இறைவனியல்பும், அவ் விறைவனை யுணர்ந்து இன்பம் எய்துதற்குத் தடையாகவுள்ள பாசப் பொருள் கனி னிபல்பும் உள்ளவாறுணர்ந்து தெளிவெய்தினர். இந் நிலையில் அடிகள், கூத்தினர் தன்மை வேறு கோலம் வேறாகுமாபோல்' பாண்டியன் இட்ட பணி யைப் புறத்தே மேற்கொண்டும் அகத்தே பற்றற்றும் சிவபத்தியில் ஈடுபட்டு ஒழுகுவராயினார். அந்நாளில், பாண்டியற்குக் குதிரை வாங்கப் பொன் கொண்டு சென்றவர், திருப்பெருந்துறையில் குருந்த மரத்து நீழலில், இவர் 'பந்தமறும் எல்லையது பார்த்தினிதிருந்த ' சிவபரம் பொருளாகிய குருபரனைத் தரிசித்து உள்ளங் கரைந்து உலகியலை மறந்து, 'உன்னடி யடைந்து நாயேன் உறுபவம் ஒழித்தல் வேண்டும், என்னுயிர்க் கிறைவா என்று முன்னுற வணங்கி கின்றார். இவர் அதி தீவிர பக்குவ நிலையைக் கண்டு பெருமான் அருள் கூர்ந்து, சிவஞான போத மென்னுஞ் சைவத் தலைநூலின் நுண்பொருளைத் தெளி வுறுத்தியபின், 'இருவினைப் பாசமும் மலக்கல் லார்த் தலின், வருபவக் கடலின்வீழ் மாக்களேறிட, அருளு மெய்! யஞ்செழுத்தை' அநுபவ நிலையில் உபதேசித்