பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்க வாசகர் தருளினர். இங்ஙனம் குருபரன்பா லுணர்ந்த தம் அநுபவத்தையே, 'கானேயோ தவஞ் செய்தேன் சிவாய நமவெனப் பெற்றேன்' என்று அடிகள் திரு வாய் மலர்ந்தருளினர். இவ்வாறாகப் பாண்டியன் பொருட்டுக் குதிரை வாங்கப் போனவர் 'கொன்னுறு பரி கொளாமல் கோவணங்கொண்ட செய்தியைப் பாண்டியன் கேட்டு, ஓலைபோக்கி, அடிகளை அழைப்பித்துத் துன்புறுத் தினானாக, அடிகள் தஞ்செய லற்று எல்லாம் இறைசெய் வாகக் கண்டிருப்பவராதலின், அவ் விறை நினைவில் ஈடுபட்டிருந்தனர். பின்னர், இவர் பொருட்டு இறை வன் கரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம்நிகழ் வித்தும், மண் சுமந்தும், பிரம்படியுண்டும், அடிகள் பால் தாங் கொண்ட அருட்டிறத்தை உலகுக்கு விளக்கி யருளினார். அடிகள் திருவரு ளமிர்தத்தை நிறைய வுண்டு, சிவாநுபவச் செல்வராக விளங்கிய நிலையில், 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்' என்ற முதுமொழிப்படி, தம் அருளநுபவத்தை உலகத்துள்ள மக்களுக்கெல்லாம் வழங்க ஆண்டவன் அருள் வழி நினைந்து திருவாசகம் என்னும் இசைப்பாடற் றொகு தியைத் திருவாய் மலர்ந்தருளினர். உலகப் பற்றை முழுதும் துறந்த உத்தமச் சிவஞானச் செல்வர், தமக்கு இறைவன் அருளிய ஒப்புயர்வில்லாப் பேரின்ப நிலையைத் தாம் அனுபவித்த அளவில் நின்றுவிடாது, உலகத்து மக்களுக்கெல்லாம் உபகரிக்க நினைந்தது பெரிதும் பாராட்டத் தக்கது. இல்வாழ்வார்க்கு அன்பென்னும் அருங் குணமும்