பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 உரைாடைக் கோவை துறவற் வாழ்க்கை யுடையார்க்கு அருளென்னும் பெருங் குணமும் சிறப்பாக இருத்தல் வேண்டும் என்பர் திருக்குறளாசிரியர். மாணிக்க வாசகப் பெரு மான் இவ்விரு பெருங் குணங்களுக்கும் நிலைக்களமாக விளங்கிய பெரியராவர். கிரியை " இவர் மேற்கொண்ட நெறி. சரியை யோகங்களுக்கு மேலான ஞானநெறியாகிய சன்மார்க்க மாகும். இந் நெறியில் நின்ற அடிகள், காணப்படும் இவ்வுலக வியல்புகளைத் தம் கூர்த்த மதியால் உய்த் துணர்ந்து, பருப்பொருளாகிய மாயா காரியங்களெல் லாம் தத்தங் கால வெல்லையில் அழிந்தழிந்து தேய்ந் தொழிவன என்னும் உண்மையையும், இவ் வெல்லா வற்றையும் கன்மங்களுக் கீடாகப் படைத்தும், காத்தும் கராதும் விளையாடும் பேராற்றல் வாய்ந்து கால வெல்லையைக் கடந்து நிற்கும் கடவுள் ஒருவருளர் என் பதையும், அப் பெருமான் சார்ந்தார்க்குத் தண்ணிழ லாய்ப் பேரின்ப வடிவாகத் திகழும் இயல்பினர் என் பதையும் உள்ளவாறுணர்ந்து, அப் பெரும் பெயர்க் கடவுள் உபதேசத்தால், தாம் எய்திய பேரானந்தப் பெருஞ் செல்வத்தைத் தம் சோதரராகிய மக்களெல் லோரும் துய்க்கவேண்டு மென்னும் பேரருளுடை யராய்த் திருவாசகம் என்னும் தெளிதேனைப் பொழி யும் அருண்முகி லாயினர். திருவாசகப் பாடல்கள் மாணிக்க வாசக அடிகளு டைய சிவாநுபவ நிறைவில் பொங்கித் ததும்பி வெளிப் பட்ட அமுத வெள்ளமெனின் முறையாகாது. பிற் காலத்துச் சிவயோக நெறி நின்று இறையரு ளநுபவத்தி