பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

உலகப் பெரியார் காந்தி



உடலுக்கு உணவு எவ்வளவு அவசியமோ அதுபோல ஆத்மாவுக்குப் பிரார்த்தளை மிகவும் அவசியம்.

ஹிருதய பரிசுத்தத்தில்தான் அழகைக் காணமுடியும்.

வாழ்க்கையின் ஒரு மாறுதலே சாவாகும். அதைத்தவிர வேறொன்றுமில்லை. ஆதலால் சாவை நாம் எப்பொழுதும் எதிர்பார்க்க வேண்டும். சாவுக்கு அஞ்சுபவன் கோழையே.

மாணவர்களே பின்பற்றுங்கள் !

மாணவர்கள் பின்பற்றுவதற்காக மகாத்மா காந்தி உபதேச ரூபமாகச் சில அருள்மொழிகளைக் கூறியிருக்கிறார், அவைகள் ஒவ்வொன்றும் சிறந்த மாணிக்கச் சொற்களாகும்.

மாணவர்கள் அரசியலிலும் கட்சி வாதங்களிலும் ஈடுபடக் கூடாது. அவர் உன் அரசியல் வேலை நிறுத்தங்களிலும் ஈடு படக்கூடாது. அவர்கள் நூல் நூற்பதைத் தங்களுடைய முக்கிய கடமைகளில் ஒன்றாகக் கருதவேண்டும் அவர்கள் கதருடையையே அணியவேண்டும்.

மாணவர்கள் வகுப்பு உணர்ச்சிக்கோ அல்லது தீண்டாமை உணர்ச்சிக்கோ மனதில் இடந்தாலாகாது. தேசீயக்கொடியின் தத்துவத்தை அவர்கள் உணரவேண்டும். மாணவர்கள் தோட்டி வேலை செய்யவும் தயாராக இருக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களுடைய உயிர் போவதாக இருந்தாலும், அஹிம்சையைக் கைவிடலாகாது. அவர்கள் ரகசியமாக எதுவும் செய்யக்கூடாது. அவர்கள் எப்பொழுதும் தியாகம் செய்யத் தயாராக இருக்கவேண்டும்.

காந்திஜி அனுஷ்டித்த உண்ணாவிரதங்கள்

மகாத்மா காந்தி பல தடவைகளில் தமது ஆத்மா பரிசுத்தத்துக்காகவும் ஹிந்து--முஸ்லின் ஒற்றுமைக்காகவும் உண்ணாவிரதம் எடுத்திருக்கிறார். அந்த உண்ணாவிரதங்களில் முக்கியமானவைகள் பின்வருமாறு: