பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமரை இழந்தோம்

27



துக்கு ஆளாக்கப்பட்டுவிட்டோம், கட்சிகளை, கட்டுகளை, ஆசாபாசங்களை, கோபத் துவேஷங்களைக் கடந்து நின்ற ஒரு உத்தமரை இழந்துவிட்டோம்

இந்தத் துக்கம், கட்சிக் குரோதச் சுவர்களை இடித்தெறிந்து, நாட்டு மக்கள் அனைவரையும் குன்றாகப் பிணைக்கிறது. பல தலைவர்களின், ஆறுதலுரைகளிலும் இந்த எண்ணம் திண்ணமாகத் தெரிகிறது, மனதைக் கட்டுக்குக் கொண்டுவரவேண்டிய நோம் தவிறினால், துக்கம், மக்களைக் கல்லாக்கிவிடும்--அவ்வளவு ஆழப் பாய்ந்துவிட்டது துக்கம்.

கடைசி முறையாக, அவரைக் காண, இந்தியாவிலே உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களெல்லாம் ஓடோடி வந்து, அவர் பக்கம் நின்று புலம்பினர். சின்னாட்களுக்கு முன்பு, தங்கள் ஒப்பற்ற தலைவர் அவுங்சானை, கொலைபாதகனால் இழந்து தவிக்கும் பர்மியப் பிரதிகளும் வந்திருந்தனர். கவர்னர்கள் அவர் காலடி நின்றனர்--வைசிராய் அவர் நிலைகண்டு வாய்விட்டு அழுதார் வல்லரசுகளிலே எல்லாம் வருத்தம் தெரிவித்து அறிக்கைகள் வெளிவந்தன. ஆனால், இவை அவ்வளவும், உள்ள துக்கத்தை அதிகப்படுத்துவதாக அமைகின்றனவேயொழிய, குறைக்கும் வழிகளாகத் தோன்றவில்லை. எந்தவிதமான ஆறுதலை. நாடினாலும், அதனைத் தாண்டி அம்பால் நம்மை இழுத்துச் சென்று, இந்தத் துக்கம் தாக்குகிறது. இந்தப் பயங்கர நிலையிலிருந்து விடுபடும் ஒரே வழி, இந்த துக்கத்தை, நம்மை ஒரு சேரப் பிணைக்கும் சக்தியாக மாற்றுவதுதான். இந்த மகத்தான வேலையை முன்னிருத்தி, அழுத கண்களுடன் நின்றபோதிலும், அறநெறியைக் கைப்பிடித்து, நிற்போமாக. இவ்வளவு பெரிய கஷ்டத்தைத் தாங்கிக்கொள்வோமானால், இனி நமது வாழ்நாளிலே நம்மை வதைக்கக்கூடிய அளவுக்கு ஆற்றலை, எந்தக் கஷ்டமும் பெறமுடியாது. அவர் மறைந்தார்--அவரை அவனி மறவாது இவருக்கு இருந்த மன உறுதியில் ஆயிரத்திலோர். பாசுமேனும் நாம் பெற்றால்தான், அவனி நம்மைக்கண்டு, அவர் வாழ்ந்த நாட்டுமக்கன்தான் இவர்கள் என்று கூறும்,