பக்கம்:உலகப்பெரியார் காந்தி, ஒன்பதாம்பதிப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமரை இழந்தோம்

33



தன் வேலை முடிந்தது என்று எண்ணிவிடுவதுபோலவே, புலி புகுந்ததால் ஏற்பட்ட சேதம், புலியைக் கொல்ல போரிட்டதால் உண்டான சேதம், ஆகியவைகளைப் போக்குவது, வேறு ஏதேனும் துஷ்ட மிருகங்கள் புகாதபடி பாதுகாவல் அமைப்பது போன்ற காரியங்களைக்கூட தோட்டக்காரன் வெற்றிபெற்ற மகிழ்ச்சியால், கொஞ்சகாலம் பொறுத்துத்தான் செய்ய முற்படுவான். அதுபோலவே, அடிமைப்பட்டிருந்தபோது ஏற்பட்ட அவதிகளையும் அல்லல்களையும் துடைத்திடும் அரும் பணியை, விடுதலைப் போரில் வெற்றிபெற்ற பல நாடுகள் செய்யாமல் இருந்துவிட்டதுண்டு. காலங்கடந்தபின் செய்யத் தொடங்கியதுண்டு.

இந்தியாவின் விடுதலை சம்பந்தமாகக் கவனித்தாலோ, இவை போல மட்டுமல்ல, மற்ற நாடுகளிலே ஏற்படமுடியாத நிலைமை இங்கு இருக்கக் காணலாம்.

அடிமைப்பட்ட பல நாடுகளிலே, சுதந்திரம் வேண்டும் என்பது மட்டுமே பிரச்னை-இங்கோ, சுதந்திரமும் வேண்டும். புதுசமுதாய அமைப்பும் வேண்டும். என்று கேட்க வேண்டிய நிலைமை இருந்தது. இங்கோ, விடுதலை வேண்டும் என்று போராடத் தொடங்கியபோது, அன்னிய ஆட்சி ஒழிய வேண்டும் என்பது மட்டும் முழக்கமாக இல்லை அந்த ஒரு முழக்கம் மட்டும் போதுமானதாகத் தெரியவில்லை. அன்னிய ஆட்சிமட்டும் தொலைந்தால் போதும் என்ற அளவுடன், நின்றுவிட மனமில்லை. ஏனெனில் இந்நாட்டு அமைப்புமுறை, தேவையான வேறு பல இலட்சியங்களைக் கொள்ளவேண்டிய நிலையை ஏற்படுத்திவிட்டது. எனவேதான் இங்கு சாதாரணமாக, அடிமைப்படுத்தப்பட்ட மற்ற நாடுகளிலே, அன்னிய ஆட்சி ஒழியவேண்டும் என்ற ஒரே முழக்கம் மட்டும் கிளம்பியது போலல்லாமல்,

அன்னிய ஆட்சி ஒழியவேண்டும்,
மக்களாட்சி மலரவேண்டும்
இந்து--முஸ்லிம் ஒற்றுமை வேண்டும்,
தொழில்கள் பெருகவேண்டும்.

3