பக்கம்:உலகு உய்ய.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. உலகு உய்ய!

தாய்த்தலை யன்பு:

ஒருவருக் கொருவர் செலுத்தும் அன்புகட்குள்ளே தாய் சேயிடத்துச் செலுத்தும் அன்பே தலையன்பாகும். இதனைத் 'தாய்த் தலையன்பு என்பர். இவ்வளவு பிணை யன்புடைய தாயையே குறைத்துக் கூறும் பழமொழி யொன்று உண்டு. 'தாயாயிருப்பினும் சேயாயிருப்பினும் வாயும் வயிறும் வேறு” என்பதே அப்பழமொழி. இதனால் அறியப் பெறுவதாவது: ஒவ்வோர் உயிரும் தன்னலத் தையே பெரிதாகக் கருதும் என்பதாகும்.

பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையேயுள்ள தொடர்பே இத்தகைய தெனின், கணவன் மனைவியர், உடன் பிறந்தவர்கள், மற்ற உற்றார் உறவினர், நண்பர் முதலியோரிடையேயுள்ள தொடர்பு எத்தகையதா யிருக்கக் கூடும் என உய்த்துணரலாம்.

உலக நலம்:

உலகில், தன்னலம் மட்டும் கருதுபவரே மிகப்பலரா வர்; குடும்பத்தார் நலனையும் கருதுபவர் இவரினும் குறைந்தவரே; உற்றார்-உறவினர்-நண்பர் ஆகியோரின் நலனையும் நோக்குபவர் இவரினும் இன்னும் குறைந்த வரே; அண்டை அயலார் ஊரார் ஆகியோரின் நலனையும் கருதுபவர் இவரினும் மேலும் குறைந்தவரே; நாட்டின் நல னைக் கருதுபவர் இன்னும் மிகவும் குறைந்தவரே. உல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/10&oldid=544668" இலிருந்து மீள்விக்கப்பட்டது