பக்கம்:உலகு உய்ய.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகத் தாய் வாழ்த்து

தொல்லுலகத் தாயேநீ துவளாமல் உழைத்திடுவாய் எல்லையிலா அனைத்துயிரும் இன்பமிகப்

பெறுவதற்கே! தன்னையேதான் சுற்றலுடன் தவழ்ந்துநகர்

. பம்பரம் போல் உன்னை நீசுற் றிக்கொண்டே உயர்கதிரை வலம்

வருவாய்

தன்னுடலை உருட்டுருட்டித் தகுகோயில் சுற்றுகின்ற தன்னிகரில் அன்பனைப்போல் தாயேநீ உருளு

கின்றாய்

வானகத்துப் பாதைகளில் வலமிடும் நண் பர்தமைப்

போல் வானமதில் பாதையொன்றும் வகுத்துக்கொண்

டாயுனக்கே

அணுவளவும் பிசகாமல் அவ்வழியே செல்கிறநின் இணையில்லாக் கடமையுள்ளம் எந்த மக்கும்

வேண்டுமம்மா! சோராத உனதுழைப்பால் சுறுசுறுப்பை யாங்களுமே தீராத உறுதியொடு தெரிந்துகொண்டே இயங்க

வைத்தாய்

ஞாயிறைநீ சுற்றுவதன் நல்லநோக்கம் யாதோசொல் பேயிருளை அகற்றியொளி பெறச்செயலால்

சுற்றுவையோ! ஞாயிறேஉன் னையுமீன்ற நற்றாயென் பதனாலோ ஞாயிறேஉன் மக்களுக்கு நலம்பலவும் செய்வதாலோ ! நீயியங்கா திருந்துவிடின் நிலைத்திடுமோ உயிர்

வாழ்க்கை தாயுனையே மக்களெல்லாம் தலைவணங்கி

வாழ்த்துதுமே!

1-1: தொல்லுலகத் தாய் - பூவுலகம். 1-2: உயர் கதிர் - ஞாயிறு. 1-3: இப்பகுதி அங்கப் பிரதட்சணத்தைக் குறிக்கிறது. 2-1: வலமிடும் நண்பர் : செவ்வாய், புதன் முதலிய மற்ற கோள்கள். 2-2: பூவுலகம் நாள்தோறுக் ஒரே மாதிரியாய் இயங்கும் ஒழுங்குநிலையைம் (Cosmos) குறிக்கின்றது. 3-2: பூவுலகக்கோள், ஞாயிற் றினிடமிருந்து பிய்த்துக் கொண்டு பிறந்த ஒரு பொறி எனச் சொல்லப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/9&oldid=544667" இலிருந்து மீள்விக்கப்பட்டது