பக்கம்:உலகு உய்ய.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. ஆக்க வேலைகள்

அணுயுகம்:

இந்தக் காலம் அணுயுகம். அமெரிக்க (U.S.A) நாடு சப்பான் நாட்டில் இரண்டு அணுகுண்டுகள் (Atom Bombs) போட்டதிலிருந்து, உலகில் அணுவை அழிவு வேலைக்குப் பயன் படுத்தலாகாது - ஆக்கவேலைக்கே பயன்படுத்த வேண்டும் என்னும் பசப்புப் பேச்சு, பரவலாக, உலகம் முழுவதும் ஒப்புக்காவது பேசப்படுகிறது. உலகம் உய்ய வேண்டுமாயின், எந்த உருவத்திலும் அழிவு வேலைக்கு இடம் தராமல், ஆக்க வேலைகளிலேயே மக்களினம் கருத்துச் செலுத்த வேண்டும்.

காலத்தைப் பொன்னினும் போற்றி, சோம்பலால் காலந் தாழ்த்தாது, தோல்விக்குத் துவளாமல், எண்ணித் துணிந்து, கருமமே கண்ணாயிருந்து, வேலைகளில் சிறியது பெரியது என்ற வேறுபாடு கொள்ளாமல், ஆக்க வேலை களில் மக்களினம் ஈடுபட வேண்டும்; வேண்டாத வேலை களிலும் விளையாட்டுக்களிலும் காலத்தை வீணாக்காது, பயனுள்ள முறையில் ஒய்வுப் பொழுதைச் செலவழித்து, எளிமையும் சிக்கனமும் கொண்டு அரும்பெருஞ்செயல் ஆற்ற வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைவதற்கு உதவும் கல்வி அனைவருக்கும் கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.

பாரதியாரின் பரிந்துரை:

சுருங்கக் கூறின், அனைவரும் பயனற்ற துறைகளில் கவனம் செலுத்தாது, ஊக்கமுடன் ஆக்க வேலைகளில் ஈடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/103&oldid=544760" இலிருந்து மீள்விக்கப்பட்டது