பக்கம்:உலகு உய்ய.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103

பட்டுக் கடுமையாய் உழைக்க வேண்டும். சுப்பிரமணிய பாரதியார் சில ஆக்கத்தொழில்களைப் பரிந்துரைத்துள் Gттrf.

"இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே

யந்திரங்கள் வகுத்திடு வீரே

கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே

கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே

அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்

ஆயிரம் தொழில் செய்திடு வீரே

பெரும் புகழ் நுமக்கே யிசைக்கின்றேன்

பிரம தேவன் கலையிங்கு நீரே!”.

“மண்ணெ டுத்துக் குடங்கள் செய் வீரே மரத்தை வெட்டி மனைசெய்குவீரே உண்ணக் காய்கனி தந்திடு வீரே

உழுது நன்செய்ப் பயிரிடுவீரே எண்ணெய் பால்நெய் கொணர்ந்திடு வீரே

இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே விண்ணி னின்றெமை வானவர் காப்பார்

மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே'.

என்பன பாரதியார் பாடல்கள். அரிய தொழில்களுடன் எளிய தொழில்களையும் பாரதியார் பரிந்துரைத்துள்ளார். எல்லாம் பயனுள்ள ஆக்க வேலைகளே. ஒவ்வொருவரும் தத்தமக்கு ஏற்ற வேலைகளைச் செய்யலாம்.

இதுகாறும் மேலே சுருங்கக் கூறியுள்ளன. வற்றை இனிச் சிறிது விரிவாகக் காண்பாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/104&oldid=544761" இலிருந்து மீள்விக்கப்பட்டது