பக்கம்:உலகு உய்ய.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

பொன்னினும் சிறந்த பொருள்:

“பொன்னினும் சிறந்த தொரு பொருள் அருங் காலமே' என்பது தமிழ் முதுமொழி. காலம் பொன்னா னது, - Time is gold என்பது ஆங்கில மொழி. ஒரு நாள் கழியின் வாழ்நாளில் ஒருநாள் குறைந்து விட்டது என்பது பொருள். எனவே, நாள் என்பது உயிரைச் சிறிது சிறிதாக அறுக்கும் வாள் என வள்ளுவர் திருக்குறளில் தெரிவித்துள்ளார்:

'நாளென ஒன்று போற் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்” (334.)

என்பது திருக்குறள் பாடல். எனவே, காலத்தை விணே கழித்த லாகாது. காலம் தாழ்த்தல், வாழும் காலத்தைத் திருடும் கள்வ னாகும் என்னும் கருத்துடைய 'procrastination is the thief of time” argårgylh offióla) offlal மொழி ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. எனவே, மக்கள் காலத்தை வீணாக்காது ஆக்க வேலைகள் புரிய வேண் டும். கல்வி நிறுவனங்களில் கால அட்டவணை' (Time Table) அமைத்து, இந்த நேரத்தில் இந்தப் பாடம் . அந்த நேரத்தில் அந்தப் பாடம் எனக் குறிப்பிட்டுக் கொண்டு செயல்படுவது போல, ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க் கைக்கும் கால அட்டவணை அமைத்துக்கொண்டு செயல் படவேண்டும்.

யாரும் காலத்தைக் கொன்னே கழித்த லாகாது. சிலர் அல்லர் - பலர் - போர் அடிக்கிறது, நேரம் போக வில்லையே எனக் கவலை யுறுவதைக் காணலாம். நேரம் போக வில்லையே’ எனக் கவலை யுறாமல், நேரம்போத வில்லையே’ என்று கவலை யுறும்படி செயல்முறைகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/105&oldid=544762" இலிருந்து மீள்விக்கப்பட்டது