பக்கம்:உலகு உய்ய.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

வடலூர் வள்ளலார்:

"அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண் டும், ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்” என்று இறைவனிடம் வேண்டியவர், வடலூர் வள்ளலார் என்று வழங்கப் பெறும் இராமலிங்க அடிகளாராவர்.இவர் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வட லூர் என்னும் ஊர்ப்பகுதியில் வாழ்ந்தவர். இவர் பற்றிய செய்தியும் போதிய அளவு பின்னால் ஒரு தலைப்பில் தரப் பெறும். திருவள்ளுவரைப் போலவே, இவரும், உலகம் உய்ய வேண்டும் என்னும் பரந்த பொது நோக்குடன் சம ரச சுத்த சன்மார்க்க சங்கம்’ என்னும் ஒர் அமைப்பினை நிறுவிப் பாடுபட்டவர். 'ஒருமையின் உலகெலாம் ஓங்குக' என்று பாடிய வள்ளலார், உலகம் உய்ய வந்தவர்' என் னும் உயரிய கருத்தினை, இவர்தம் அணுக்கத் தொண்ட ருள் ஒருவர், பின்வரும் பாடலுள் அறிவித்துள்ளார்:

'உலகம் தழைக்க வந்துதித்த உருவே வருக! ஒதாதே

உற்ற கலைகள் அனைத்தினையும் உணர்ந்தோய் வருக!”

இந்தப் பாடலால், இராமலிங்க அடிகளார், ‘உலகம்’ உய்ய வந்தவர் என்பதும், மற்றவரும் இவரைப் போலவே இந்தத்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற படிப்பினை யும் கிடைக்கும். -

உலகத் தொடக்கநூல்கள்:

நம் முன்னோர்கள் சிலர், தம் நூல்களை உலகம்’ என்ற சொல்லிலிருந்தே தொடங்கியுள்ளமை ஈண்டு கரு தற்பாலது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/12&oldid=544670" இலிருந்து மீள்விக்கப்பட்டது