பக்கம்:உலகு உய்ய.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

'உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு'

என நக்கீரர் திருமுருகாற்றுப் படையைத் தொடங்கியுள் 6mm ff.

'உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன்'

எனச் சேக்கிழார் பெரிய புராணத்தைத் தொடங்கியுள் өттrf.

'உலகம் யாவையும் தாமுள வாக்கலும்’

எனக்கம்பர் தம் இராமாயணநூலைத் தொடங்கியுள்ளார்.

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு”

எனத் திருவள்ளுவர் தம் திருக்குறள் நூலின் முதல் பாவி லேயே உலகைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இன்னும் பெரியோர்களின் நூல்களைத் துரு விப் பார்க்கின், அவர்தம் ஒரே உலகக் கோட்பாடு தெற் றென விளங்கும்.

தன்னல வேட்டை

உலகம் உய்ய உழைத்த இத்தகைய பெரியார்களோடு தன்னல வேட்டைக்காரர்களை ஒத்திட்டுப் பார்க்குங் கால் மிகவும் வேதனையா யிருக்கிறது. பிறரது வாழ்வைப் பொறுக்காதவர் பலர் வையத்தில் உளர். பக்கத்து வீட்டுக் காரனுக்கு இரண்டு கண்களும் கெட்டுவிடுவது உறுதியா யின், எனது ஒரு கண்ணை இழக்க யான் உடன்படுவேன் என்று ஒருவன் கூறியதாகச் சொல்லப்படும் கதை அறிந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/13&oldid=544671" இலிருந்து மீள்விக்கப்பட்டது