பக்கம்:உலகு உய்ய.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

நேரம் போதாதிருக்கக் கூடிய எதிர்காலத்தில், இந்த வீணான விளையாட்டுக்கட்கெல்லாம் நேரம் கிடைப்பது அரிது. எனவே, வேண்டாத விளையாட்டுக்களைப் படிப் படியாகக் குறைத்துக் கொண்டுவந்து, பின்னர் அறவே விலக்கிவிடுவதே எதிர்கால நன்மைக்கு வேண்டற்பால தாகும். (நானும் ஒரு கிரிக்கெட் பைத்தியம். இப்போது பைத்தியம் தெளிந்து விட்டது).

ஒய்வும் பொழுதுபோக்கும்:

குறிப்பிட்ட ஒரு வேலையைச் செய்து முடித்தவர்கள் படுத்துத் தூங்குவதுதான் ஒய்வு’ என்பதில்லை. வேறு விதமான வேலை செய்தலும் ஒய்வாகும். அஃதாவது, ‘Gaisma LDT bDGpúb’ (Change of programme) @üøj gGib. மூளை வேலை செய்து களைத்தவர்கள், படித்தல் - எழுது தலை விட்டு, தோட்டத்திற்குச் சென்று காய்கறிச் செடி களைக் கவனித்து அவற்றிற்கு ஆவன செய்வதும் ஒய்வு ஆகும். உடல் வேலை செய்து களைத்தவர்கள், அதை விட்டுவிட்டு, செய்தித்தாள் படித்தல் நூல் படித்தல் போன்ற மூளைவேலை செய்வதும் ஒய்வு ஆகும். உடல் உழைப்பாளிகட்கு மூளை வேலையும், மூலை வேலைக் காரர்கட்கு உடல் உழைப்பும் ஒய்வு ஆகும். வாளா அமர்ந் திருப்பதும் தூங்குவதுமே ஒய்வு எனக் கொண்டு காலத் தைக் கொன்னே கழிக்க வேண்டா. இதனால்தான் சுப்பிரமணிய பாரதியார்,

'ஓடி விளையாடு பாப்பா - நீ

ஒய்ந்திருக்க லாகாது பாப்பா'

என்று கூறியுள்ளார். எனவே, வறிதே ஓய்ந்து அமர்ந்திரா மல் வேறு மாற்று வேலை செய்யலாம். ஒரு துறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/125&oldid=544781" இலிருந்து மீள்விக்கப்பட்டது