பக்கம்:உலகு உய்ய.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

வேலை செய்யும் போது களைத்துப் போன உடல் உறுப் புக்கள், வேறு துறை வேலை செய்யும் போது இளைப் பாறுவதாகக் கூறப்படுவது ஈண்டு எண்ணத்தக்கது.

அடுத்து, - பொழுது போக்கு என்னும் பெயரில் சிலர் அல்லர் - பலர், பொழுதை வீணே போக்குகிறார்கள். எந்த வேலையும் செய்யாமல் உண்ணும் செல்வ வாய்ப்புப் பெற்றவர்கள் பொழுதைப் போக்குவது ஒருவகை; வேறு வேலை செய்பவர்கள் ஒய்வுப் பொழுதைப் போக்குவது இன்னொரு வகை; வேலையுள்ளவர்களே வேலை செய் யாமல் வீண் பொழுது போக்குவது வேறொரு வகை.

எவராயினும் பொழுதைப் பயனுள்ள முறையில் போக்க வேண்டும். சூதாட்டம், குதிரைப் பந்தயம், வேண்டாத விளையாட்டுக்கள், இன்ன பிறவற்றில் பொழுதைப் போக்கலாகாது. மிகுந்திருக்கும் பொழுதைப் பின்வரும் பயனுள்ள வேலைகளில் கழிக்கலாம்: வீட்டு வேலை, தோட்ட வேலை, தேனி வளர்ப்பு, கோழிப் பண்ணை, சிறுகைத்தொழில்கள், இன்ன பிற தற்காப்பு வேலைகள்' செய்யலாம். மற்றும், குளம் - கால்வாய் வெட்டுதல், ஏரி - குளத்தில் தூர் எடுத்தல், சாலை அமைத்தல், எழுத்தறியாதார்க்கு எழுத்தறிவித்தல், மக்களின் மூட நம்பிக்கைகளைப் போக்குதல், நோய்த் தடுப்பு முறையை மக்கட்கு விளம்பரம் செய்தல், இலக் கியக் கழகம் - கலைக்கழகம் - சீர்திருத்தக் கழகம் - இன்ன பிற பொது அமைப்புக்களில் சேர்ந்து பொதுப்பணி புரி தல், இன்ன பிற சமூகக் காப்பு வேலைகள் செய்யலாம். மற்றும், செய்தித்தாள் படித்தல், நல்ல நூல்களைப் படித்து இன்புறுதல் - அறிவைப் பெருக்குதல், நல்லவ ரோடு கலந்து பழகி உரையாடி நற்பண்புகளை வளர்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/126&oldid=544782" இலிருந்து மீள்விக்கப்பட்டது