பக்கம்:உலகு உய்ய.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

போக்காகக் கொள்கின்றனர். இதனால், காலமும் காசும் பாழாகுவதுடன், உடல் நலமும் ஒழுக்கமுங்கூட ஒருசேரப் பாழாகின்றன. அந்தோ அளியர்!

கல்வி நிறுவனங்களிலே இந்தக் காலத்தில் நிலவும் போக்கிரித்தனச் (Rowdyism) செயல்கட்குத் திரையோவி யக் கொட்டகைகளில்தான் வித்து இடப்படுகிறது என்பது அறிஞர் சிலரின் கருத்து. திரையோவியக் கொட்டகைக ளில் சீழ்க்கை அடிப்பதும் கூச்சல் போடுவதும் குழப்பம் செய்வதும் கைதட்டுவதும் கேலி-கிண்டல் செய்வதும் ஆகிய தீச் செயல்கள் யாவற்றையும் அப்படியே கல்வி நிறு வன வகுப்புகளிலும் வந்து செய்கின்றனர். கல்வி உருப்படுமா? கற்றவர்கள் ஒழுக்கம் உடையவர்களாக இருப்பார்கள் என்னும் கருத்தில், ஒரு கல்விக்கூடம் திறப்பது, ஒரு சிறைச் சாலையை மூடியதாகும்’ என்பதாக, பிரெஞ்சுப் பேரறிஞர் ரூசோ' (Rousseau) என்பவர் கூறி யுள்ளார். ஆனால் இந்தக் கால நடைமுறையை நோக்குங் கால், கல்வி நிறுவனங்களில் மாணாக்கர்கள் என்னும் பெயரில் இருப்பவர்களே சிறைக் கூடத்துக்குச் செல்ல வேண்டியவர்களைப் போல் தோன்றுகின்றனர். காலத்தின் கொடுமை என்னே!

எனவே, திரையோவியங்களின் எண்ணிக்கையும் திரை யோவியக் கொட்டகைகளின் எண்ணிக்கையும் குறைய வேண்டும். உண்டாக்கப்படும் ஒரு சில திரையோவியங்களும் நல்ல தரம் உடையனவாக-நல்லறிவும் நல்லொழுக்கமும் புகட்டுவனவாக அமைய வேண்டும். இதற்கு மாறாக, காசையே கண்ணாகக் கொண்டு, மக்களைக் கவரும் முறை யில் கீழ்த்தரமானகோட்சிகளைப் படம் பிடித்துத் திரையோ வியம் என்னும் பெயரில் காட்டுகின்றனர். படத் தணிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/131&oldid=544787" இலிருந்து மீள்விக்கப்பட்டது