பக்கம்:உலகு உய்ய.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

யாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே புரியவில்லை! எனவே, தொடர்புடையவர்கள் இந்தத் துறையைத் தூய்மையுடையதாக்க வேண்டும். இல்லையேல் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை இப்படியே நீள விடின், பொழுதுபோக்கு எனப்படுவது பழுது பார்க்க வேண்டியதாகி விடும் .

ஆக்க முயற்சிகள்:

மக்கள் இயந்திரங்கட்கு அடிமையாகிவிட்ட இந்தக் காலத்தில், சிறு சிறு கைத்தொழில்கட்கும் வாய்ப்பு இருக்க வேண்டும். பாய் பின்னுதல், கூடை முடைதல், பொம்மை செய்தல், விளையாட்டுக் கருவிகள் செய்தல், உடை தைத்தல், உடைகட்குப் பூ பின்னுதல்(Embroidery), கைப்பை பின்னுதல், வீட்டிலேயே சிறுசிறு தச்சு வேலைசிறுசிறு நெசவு வேலை, இன்ன பிற ஆக்க முயற்சி வேலை கட்கு வாய்ப்பு உண்டாக்கித் தரவேண்டும். சிறார், முதி யோர், பெண்டிர் ஆகியவர்கள் வீட்டிலேயே இத்தகைய ஆக்க முயற்சியை மேற்கொண்டு ஒய்வு நேரத்தைத் தக்க முறையில் செலவிடவும்-அதே நேரத்தில் வருவாய் பெற வும் இது வழி வகுக்கும். அரசும் கற்றறிந்த அறிவியல் ஆராய்ச்சியாளரும் ஆய்ந்து, மக்கள் ஓய்வுப் பொழுதை நன்முறையில் கழிப்பதற்கு உரிய வழிவகை வாய்ப்புக்களை உண்டாக்கித் தரவேண்டும்; விற்பனைக்கும் வழி வகுக்க வேண்டும்.

பொழுது போக்குக் கலைகள்:

மேற்கூறிய கைத்தொழிற் கலைகளுடன் இசை, ஓவியம் இதழ்கட்குக் கதை - கட்டுரை - கவிதை எழுதுதல், இன்ன பிற கலைகளிலும் ஒய்வுப் பொழுதைக் கழிக்கலாம். ஒய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/132&oldid=544788" இலிருந்து மீள்விக்கப்பட்டது