பக்கம்:உலகு உய்ய.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

வுப் பொழுது முழுவதும் சீட்டு ஆடுவதும் மற்ற சூதாட்டங் கள்ஆடுவதும் வீண் அரட்டை அடிப்பதும் முதலிய வெட்டி வேலைகளை விட்டுவிட்டு, இசைக் கழகங்கட்குச் சென்று இசைகேட்டு மகிழலாம். இலக்கியக் கழகங்கட்குச்சென்று இலக்கிய உரைகளைக் கேட்டு இன்புறுவதுடன் நல்ல நடைமுறைப் படிப்பினைகளையும் பெறலாம். இவ்வா றாகப் பல துறைக் கலைகளில் ஒய்வுப் பொழுதைப் போக்கி இன்புறலாம். இதனால் தீயன எண்ணுதலும்-பேசுதலும்செய்தலுமர்கிய தீமைகட்கு இடமின்றி நன்மைக்கே இட மிருக்கும்.

கல்வி என்னும் பல்கடல்:

'கல்வி என்னும் பல் கடல்’ என்பது திருவாசகப் பகுதி. 'கல்வி கரையில கற்பவர் நாள் சில” என்பது நாலடியார்ப் பகுதி. 'கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு' என்பது ஒளவையாரின் தனிப்பாடல் பகுதி. இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே, மாணிக்க வாசகர் தமது திருவாசகநூலில் கல்வியைப் பல கடலாகக் கூறியுள்ளார். அப்போதே தமிழ் மொழியில் பல துறைக் கல்வி பெருகி யிருந்தது என்பது இதனால் புலனாகும். கம்பரும் தமது இராமாயண நூலில், தமிழ் அளக்க முடியாத பெரிய கடல்’ என்னும் பொருளில் தமிழெனும் அளப்பரும் சலதி’ என்று கூறியுள்ளார். ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே கல்வி கடலாகப் பரந்து விரிந்து-ஆழ்ந்து அகன்று பெருகியிருந்த தெனில், இந்த இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள கல்வியின் பெருக்கத்தை அளவிட முடியுமா? "Art is long, but life is short’ argi Giub egyiÈ stav GlorựMuqib ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/133&oldid=544789" இலிருந்து மீள்விக்கப்பட்டது