பக்கம்:உலகு உய்ய.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

கல்வி என்னும் பல்கடலைக் கடக்க முடியாதெனினும் அதன் ஒரு கண்ரயையாவது உலக மக்கள் அனைவரும் தொட்டாவது பார்க்க வேண்டும். கல்வி பெறாத மக்க ளைப் பெரும்பான்மையினராக வைத்துக் கொண்டு ஒரு நாடோ-உலகமோ எவ்வாறு முன்னேற முடியும்? வளர்ச்சி பெற்ற சில நாடுகளில் மட்டுமே கற்றோர் தொகை பெருகியுள்ளது. வளர்ச்சி பெறாத பெரும்பாலான நாடு களில் கற்றவர் தொகை மிகவும் குறைவே. இந்த நிலை யில் எந்த ஆக்க முயற்சியும் போதிய வெற்றி பெற முடி

யாது

به قعيتي

எனவே, பொதுவாக உலக மக்கள் அனைவரும்-சிறப் பாக ஒவ்வொரு நாட்டின் மக்கள் அனைவரும் கல்வி கற் றிருக்க வேண்டும். ஒய்வு நேரத்தில் பொழுது போக்காகக் கற்கும் கல்வியை இங்கே குறிப்பிடவில்ல்ை: அனைவரும் இளம் பருவத்திலிருந்து கற்க வேண்டிய அடிப்படைக் கல்வியே இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல இடங்களில் பல நாடு களில் வாழ்ந்த மக்கள், தங்கள் அனுபவங்களை எழுதி வைத்தச் சென்றுள்ளனர். அந்த அனுபவங்களின் தொகுப்பே கல்வி என்பது. இன்னின்ன பொருள்கள் இன் னின்ன தன்மையுடையன - இன்னின்னது செய்யின் இன் னின்னது நேரும்-இன்னின்ன மரஞ்செடி கொடிகள் இன் னின்ன பயனளிக்கும்-என்பன முழுவதையும் ஒவ்வொரு வரும் தம் வாழ்நாளிலேயே வாழ்ந்து தெரிந்துகொள்ள முடியாது. ஆயிரம்-ஆயிரம் ஆண்டுகளாக முன்னோர் பலர் அனுபவித்து அறிந்து எழுதி வைத்துவிட்டுப் போன செய்திகளை, உடம்பில் புதுக்குருதி ஏற்றிக் கொள்வது போல் நாம் அறிந்து கொள்கிறோம். மூவாயிரம் ஆண்டு களாக எழுதி வைத்துள்ள நூல்களைப் படித்தவர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/134&oldid=544790" இலிருந்து மீள்விக்கப்பட்டது