பக்கம்:உலகு உய்ய.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர்களாக மதிக்கப்பெறுவர். எனவே, இவர்தம் வயதில் மூவாயிரம் ஆண்டைக் கூட்டிக் கொள்ளவேண்டும். பல நாடுகளில் வாழ்ந்தவர்கள் எழுதி யுள்ள நூல்களைப் படிப்பவர்கள், பல நாடுகளில் வாழ்ந்த அனுபவம் உடையவர்களாக மதிக்கப் பெறுவர். இவ்வா றாக, கற்ற இளைஞர் ஒருவர், பல நாடுகளில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவராகக் கணிக்கப் பெற்று, ஒன்றும் கல்லாத முதியவர் ஒருவரைவிட மிகவும் வயதில் மூத்தவ ராகப் போற்றப்படுவார். கல்லாத முதியவரினும் கற்ற றிந்த இளைஞர்க்கு உள்ள மதிப்பு இஃதாகும்.

மன வயது:

உளவியல் கருத்துப்படி ஒருவரின் வயது இரண்டு வகைப்படும். உடல் பிறவி எடுத்த வயது, மனவயது (Mental Age) என்பன அவை. பிறவி எடுத்த உடல் வய தால் மூத்த ஒருவர் கல்வியறிவு பெறாதாராயின் அவர் மனவயதால் சிறியவரேயாவார். கல்வியறிவு பெற்றவர் உடல் வயதால் சிறியவராயினும் மனவயதால் பெரியவ ராவார். இந்த உளநூல்(Psychology) கருத்தைப் பண்டைக் காலத் தமிழ் அறிஞர்களும் பகர்ந்துள்ளனர்.

‘ஒரு குடும்பத்தில் பிறந்த பல பிள்ளைகளுள், வய தால் மூத்த அண்ணனுக்கு மதிப்பு இல்லை; கல்வி அறி வால் மூத்த தம்பிக்கே மதிப்பு உண்டு. அறிவால் மூத்த அந்த இளைஞனையே அரசும் மதித்துச் செயற்படுத்தி அவன் வழியே செல்லும்’-என்னும் கருத்தை, ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன் னனே புறநானூற்றுப் பாடல் ஒன்றில் பகர்ந்துள்ளான்:

“ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசுஞ் செல்லும்”. (183)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/135&oldid=544791" இலிருந்து மீள்விக்கப்பட்டது