பக்கம்:உலகு உய்ய.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

என்பது மன்னனின் புறநானூற்றுப் பாடல் பகுதி. மற்றும், அதிவீர ராமபாண்டியன் என்னும் மன்னன், தனது வெற்றி வேற்கை என்னும் நூலில்,

'அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்'. (34) என்று கூறியுள்ளதும் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கதாம். இதுகாறும் கூறியவற்றால், கல்வியின் இன்றியமையாமை யும்-பெருமையும். பயனும் புலனாகும்’ எனவே, இத்த கைய பயன்சால் கல்வியை உலக மக்கள் அனைவருக்கும் அளிக்கவேண்டும்.

கட்டாயக் கல்வி;

நாகரிகப் பகுதியில் வாழ்பவர்களுள்ளும் பலர் தம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; அனுப்பினும் அடிப்படைக் கல்வி பெறும்வரை விட்டு வைப்பதில்லை. குழந்தையைக் கவனிக்கவும்-வீட்டு வேலைகள் செய்யவும். சிறு வயதிலேயே பொருள் ஈட்டவும் பயன்படுத்திக் கொள் ளும் நோக்கத்தால் பள்ளிக்கு அனுப்புவதில்லை. இதற்கு இடம் தரலாகாது. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாத வர்க்குக் குற்ற வரி (அபராதம்) விதிக்கப்படும் என்பதாக அரசு அறிவித்து அனைவரையும் பள்ளிக்குக் கொணர வேண்டும்; ஏழைப் பிள்ளைகட்கு வேண்டிய எல்லா உதவி களையும் அரசு செய்ய வேண்டும். பலர் பெண் பிள்ளை களைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை. அரசு அதற்கும் இடம் grrrld6 5.Ll–Tuż 56ðast (Compulsory Education) முறையை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். பழங் காலத் தமிழகத்தில் படித்த பெண்பாற் புலவர்கள் பலர் இருந்தமை ஈண்டு நினைவு கூரத்தக்கது.

'கற்கக் கூடிய நல்ல நூல்களைப் பிழையின்றிக் கற்பா யாக’ என்னும் கட்டளைப் பொருளில், திருவள்ளுவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/136&oldid=544792" இலிருந்து மீள்விக்கப்பட்டது