பக்கம்:உலகு உய்ய.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

விரிவாகக் காணலாம்.உலகின் பல்வேறு பகுதிகளிலும் இத் தகு நிலைமை நீடித்தது. இவ்வாறாக மற முறைக்காலம்’ (வீர யுகம்) ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தது.

போர்க் கல்வி:

போர் முறைகளும் போர் வரலாறுகளும் இலக்கியங் களாக எழுதப்பட்டன. இலக்கியம் கண்டதற்கு இலக் கணம்' என்பதற்கு ஏற்பப் போர் இலக்கண நூல்களும் எழுந்தன. தமிழில், தொல்காப்பியம், திருக்குறள், புறப் பொருள் வெண்பா மாலை முதலிய நூல்களில், போர் இலக்கணம் விளக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மற்றும் உலக மொழிகள் பலவற்றிலும் போரைப் பற்றிக் கூறும் நூல்கள் பல எழுந்தன. இவ்வெழுச்சியைத் தொடர்ந்து முறையாகப் போர்க் கல்வியும் போர்ப் பயிற்சியும் அளிக்கப் பட்டன. இந்தக் காலத்தில் இராணுவக் கலைக் கழகங்கள் அமைத்துப்படைப்பயிற்சி தருவது போலவே அந்தக் காலத் திலும் நடந்தது. இதனை,

'படையும் மற்றும் கல்வி பயில் களமும் கழகம்

ஆகும்”

என்னும் சேந்தன் திவாகர நிகண்டு நூற்பாவால் அறியலாம். அமைதியின்மை:

உலகத்தில் இந்தக் காலத்தில் இருக்கும் அளவுக்கு அந்தக் காலத்தில் அமைதி யிருந்ததாகத் தெரியவில்லை. தமிழ் வழங்கும் நிலப்பகுதியை எடுத்துக் கொள்ளின் இப் பகுதிக்குள் எத்தனையோ அரசர்கள் இருந்தனர். இவ் வாறே எல்லாப் பகுதிகளிலும் இருந்தனர். ஆங்காங்கிருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/150&oldid=544806" இலிருந்து மீள்விக்கப்பட்டது