பக்கம்:உலகு உய்ய.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

அரசர்கள் ஒருவரோ டொருவர் எப்போதும் பொருது கொண்டனர். தீவட்டிக்கொள்ளை, ஊர்களை எரித்தல், பெண்களைக் கற்பழித்தல், பெண்களைக் கடத்திச்செல் லுதல் முதலிய கொடுமைகள் நடந்தன. இதனால் பொது மக்கள் பட்ட தொல்லைகட்கு அளவேயில்லை. எந்த அரசருக்கும் எந்த ஊரும் நிலையில்லை. இதனால்தான் 'எந்த ஊர்-எந்த ராசா-எந்தப் பட்டணம்” என்னும் மொழி எழுந்தது போலும் இந்தக்காலத்தில் தலைவர்கள் ‘é56fi Ligos' plan pågå (Air condition Room) @CŞāg கொண்டு படைமறவர்களை மட்டும் போர்க்கு அனுப்பு வது போல் அந்தக்காலத்தில் நடைபெறவில்லை. அரசர் களே மறவர்கட்கு முந்திப்போர்க் களத்தில் நின்று போரா டினர். போரில் அரசர்கள் இறப்பது மிகுதி. கொலைத் தண்டனையால் திருடன் இறப்பது போல், போரினால் அரசர்கள் இறந்தனர். இதனால், 'அரசன் பெண்டாட்டி யும் திருடன் பெண்டாட்டியும் கைம்பெண்டாட்டிகள் (விதவைகள்) -என்னும் முதுமொழி எழுந்தது.

அறப்போர்:

இந்தக் காலத்தில் குழந்தைகள் விடுதி, முதியோர் இல்லம், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மனைகள், திருக் கோயில்கள் முதலியவற்றின் மீதும் சிறிதும் இரக்கம் இன்றிக் குண்டுமாரி பொழியும் மறப்போர் முறையை அந்தக்காலத் தமிழ் மன்னர்கள் பின்பற்ற வில்லை. இரு வேறு எதிர் தரப்பினர் எதிர் எதிரே நின்று ஆடும் விளை யாட்டுக்குச் சில விதி முறைகளை வகுத்திருப்பது போல, அந்தக் காலத் தமிழ் வேந்தர்களும் போருக்கென்று சில அறநெறிகளை வகுத்துக் கொண்டு போரிட்டனர். இதற்கு "அறப்போர்’ என்னும் பெயர் வழங்கப் பெற்றது. ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/151&oldid=544807" இலிருந்து மீள்விக்கப்பட்டது