பக்கம்:உலகு உய்ய.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு

இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்”.

(மேலுள்ள ஐந்து பாடல்கள்: இராமலிங்க அடிகளார்)

தன்னலக்காரர்கள் மேற்காட்டியுள்ள பெரியோர் களின் பாடல்களைப் படித்துணர்ந்து பொது நலத்தின் பக் கம் உள்ளம் திருப்புவாராக! அவர்கட்கு ஆற்றுப்படை” என்னும் பண்பினையும் அறிவுறுத்தவேண்டியுள்ளது:

ஆற்றுப்படை:

ஒருவர் ஒரிடத்தில் தாம் பெற்ற பெரு வளத்தைப் பெறாத பிறர்க்கும் அறிமுகப்படுத்தி அவ்விடம் சென்று அத்தகைய வளத்தைப் பெற்று வருமாறு வழிப்படுத்தி யனுப்புதல் ஆற்றுப்படை யாகும். (ஆற்றுப் படை=) ஆற்றுப் படுத்துதல் - வழிப்படுத்துதல்). இப்பண்பு, மக் கட் பண்புகளுள் உயரிய எல்லைக் கொடு முடியாகும். இப் பண்பமைந்த தனித் தனிப் பாடல்கள் பல, தமிழ் மொழி யில் இருப்பதன்றி, புறநானூறு, பதிற்றுப் பத்து. புறப் பொருள் வெண்பா மாலை முதலிய நூல்களிலும் இடையிடையே இடம் பெற்றுள்ளன. மற்றும் முழு முழு ஆற்றுப் படை நூல்களும் தமிழில் உண்டு.

இற்றைக்கு ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டனவாகக் கருதப்படும் திருமுருகாற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, கூத்தர் ஆற்றுப்படை (மலைபடு கடாம்) ஆகிய சங்க நூல்கள் முழு முழு ஆற்றுப்படை நூல்களாகும். பிற்காலத்தும், புலவ ராற்றுப் படை, திருத் தணிகை யாற்றுப்படை, திருபாணாற்றுப்படை, ஞானி யார் ஆற்றுப்படை முதலிய நூல்கள் தோன்றின. கி.பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/16&oldid=544674" இலிருந்து மீள்விக்கப்பட்டது