பக்கம்:உலகு உய்ய.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

ទ្រ ஆம் ஆண்டில் 'செந்தமிழ் ஆற்றுப்படை என்னும் நூல் (சுந்தர சண்முகனாரால்) இயற்றி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர்கட்கு ஆற்றுப்படைப் பண்பு மிகவும் பழங் காலத்திலேயே இருந்தது. இற்றைக்கு மூவாயிரம் ஆண் டுக்கு முற்பட்டதாகச் சொல்லப்படும் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் ஆற்றுப் படைக்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அஃதாவது:

'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்’

(தொல்-பொருள்-புறத்திணையியல் - 36

என்பது தொல்காப்பிய நூற்பாப் பகுதி. இலக்கியம் கண்ட தற்கு இலக்கணம்’ என்பர். இதன்படி நோக்கின், தொல் காப்பியக் காலத்துக்குப் பல்லாண்டுகட்கு முன்பே-அதா வது-இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழர் களிடத்தில் இப்பண்பு இருந்தது என்பது புலனாகும். இந்தக் கருத்துக்களை யெல்லாம் அறிந்து, தன்னல வேட் டையாளர்கள் உலகம் உய்வதற்குரிய பாதையில் தாமும் தம் பங்கினைச் சிறிதேனும் செலுத்துவாராக!

உலகம் என்பது: .

'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே'

என்பது, சேந்தன் திவாகர நிகண்டு - மக்கட் பெயர்த் தொகுதியின் (17-ஆம்) நூற்பா ஆகும். உலகம்' என் பதற்குத் திவாகர நிகண்டு கூறியுள்ள விளக்கம் வேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/17&oldid=544675" இலிருந்து மீள்விக்கப்பட்டது