பக்கம்:உலகு உய்ய.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.59

பட்டானாம். சுடர் விளக்குகள், வாடைக்காற்றால் தெற்கு நோக்கி அசைந்து ஒளி தந்துகொண்டிருந்தனவாம். வேந்தனுக்கு முன்னால் சென்ற படைத்தலைவன், புண் பட்டுக் கிடக்கும் மறவர் ஒவ்வொருவரின் நிலையையும் முறையாக அறிவித்துக் கொண்டிருந்தானாம். மழைத்துளி போட்டுக்கொண்டிருந்ததால் நனைந்த குதிரைகள் தம் உடலை உதறுவதால் வெளிப்படும் துளிகள் மன்னன் மீது பட்டனவாம். மழையையும் பொருட்படுத்தாது குடையின் துணையுடன் மன்னன் சென்று கொண்டிருந்தானாம். இடப் பக்கத் தோளின்மேல் போட்டுக்கொண்டிருந்த மேலாடை நழுவ, அதை மன்னன் இடக்கையால் பற்றிக் கொண்டானாம்; வலக்கையை மறவன் ஒருவனது தோளின் மேல் வைத்துக்கொண்டு சென்றானாம். புண் பட்டுக் கிடந்த மறவர் ஒவ்வொருவாையும் இரக்கத்துடன் நோக்கி இன்முகங் காட்டி இனியன கூறி ஆறுதல் செய் தானாம்; நள்ளிரவிலுங்கூட படுக்கைக்குச் செல்லாமல், புண்பட்டுக் கிடந்த மறவர்கட்கு ஆகவேண்டியவற்றைக் கவனித்துக்கொண்டு, இரவு முழுதும் மறவர் சிலருடன் போர்க்களப் பகுதி முழுவதையும் சுற்றித் திரிந்து கொண்டேயிருந்தானாம். உள்ளம் உருக்கும் இந்த நிகழ்ச்சி யினை அறிவிக்கின்ற - அந்த நெடுநல் வாடை என்னும் நூலில் உள்ள பாடல் பகுதியினை இங்கே கட்டாயம் தர வேண்டும். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நிகழ்ந்த இந்நிகழ்ச்சியினை இன்றைய உலகம் சுட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும். அந்தப் பாடல் பகுதி வரு மாறு:- (நெடுநல் வாடை - அடி: 171-188)

'களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர்

ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம் போந்து வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/160&oldid=544816" இலிருந்து மீள்விக்கப்பட்டது