பக்கம்:உலகு உய்ய.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல் பாண்டில் விளக்கிற் பரூஉச்சுடர் அழல வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகமொடு முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர் மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு பருமங் கலை யாப் பாய்பரிக் கலிமா விருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப் புடைவீழ் அந்துகில் இடவயின் தழிஇ வாள்தோள் கோத்த வன்கட் காளை சுவன்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து நூல்கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென் றசைஇத் தூதுளி மறைப்ப நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான் சில ரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே’.

என்பது உள்ளத்தை நெகிழச் செய்யும் பாடல் பகுதி யாகும். இந்த நெடுஞ் செழியன் என்னும் பாண்டிய மன்னனை, போர்த்துறையாம் மறத்துறையை விட்டு அறத்துறையைப் பின்பற்றுமாறு செய்வித்த பெருமை, மருதனின நாகனார் என்னும் தமிழ்ப் புலவரைச் சாரும். இதனை இம்மன்னன்மீது இவர் பாடிய மதுரைக் காஞ்சி என்னும் நூலால் அறியலாம்.

இவ்வாறே, வட இந்தியப் பேரரசனாகிய அசோக மன்னன், கலிங்க நாட்டை வென்ற பிறகு, புண்பட்ட மறவர்கள் பட்ட பாடுகளையும் கலிங்க நாட்டு மக்கள் எய்திய பெருந்துயரையும் நேரில் கண்டு உள்ளம் நெகிழ்ந்து உருகினானாம்; புத்தத் துறவியரின் துண்டுதலால் மற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/161&oldid=544817" இலிருந்து மீள்விக்கப்பட்டது