பக்கம்:உலகு உய்ய.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இங்கிலாந்து நாட்டில் தேம்ஸ் ஆற்றங்கரையில் உள்ள 'ஈட்டன்’ என்னும் நகரில் புகழ் வாய்ந்த ஒரு கல்லூரி உள்ளது. இங்கிலாந்து நாட்டின் பெரிய அரசியல் வல்லு நர்களும் சிறந்த போர்ப் படைத் தலைவர்களும் இந்தக் கல்லூரியில் படித்ததாகச் சொல்வர். விளையாட்டுக்கு இக் கல்லூரியில் சிறப்பிடம் உண்டு. விளையாட்டு உட லுக்கு உரமும் உள்ளத்துக்கு ஊக்கமும் அளிக்கும் என்பது இக்கல்லூரியின் நம்பிக்கை. ஆங்கிலேயப் படைத் தலை வர்கள் பலர், உலக நாடுகள் பலவற்றில் பெற்ற பெரு வெற்றிக்கு, ஈட்டன் கல்லூரி விளையாட்டுத் திடலில் பெற்ற விளையாட்டுப் பயிற்சியே வித்தாக இருந்தது எனக் கூறுவது வழக்கம். இவ்வாறு விளையாட்டு ஊக்கம்’ போர் ஊக்கமாக மாறி விடக் கூடாது - அதற்கு இனியும் இடம் தரலாகாது. எனவேதான், விளையாட்டுப் பந்தயப் பரிசுப் போட்டி முறைகளை வெறுக்க வேண்டி யுள்ளது

இரு நாடுகட் கிடையே போர் ஏற்படின், செல்வாக்கு உடைய வேறு நாடுகள் சந்து செய்வித்துப் போரை நிறுத் தலாம். ஆனால், பாலுக்கும் காவல் - பூனைக்கும். தோழன்’ என்ற மாதிரியில் இல்லாமல், உண்மையான அக்கறையுடனும் நடுவு நிலைமையுடனும் சந்து (மத்தியஸ் தம்) செய்யும் பணி நடை பெறவேண்டும். சில வல்லரசு களின் தூண்டுதல்களால் பல இடங்களில் கலகங்கள் நிகழ்வதை உலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இம்மாதிரியான சிண்டு முடி வேலையைச் செல்வாக்குள்ள வல்லரசுகள் நிறுத்திக் கொண்டு, உண்மையான இரக்க உணர்வுடன் உலகில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண் டும். ஒன்றிய நாடுகளின் உலக மன்றமும் (U.N.O), இரு நாடுகட் கிடையே போர் நிகழின் விரைந்து முயன்று ஆவன செய்யின் போரை நிறுத்தி விடலாம். இந்த மன்றத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/175&oldid=544831" இலிருந்து மீள்விக்கப்பட்டது