பக்கம்:உலகு உய்ய.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175

தால் இம்முயற்சி செய்யப்படுகிற தெனினும், உடனே விரைந்து செயல்பட்டுத் தொடக்கத்திலேயே போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. - நிறுத்தவும் முடிய வில்லை. இப்போது (1980-1986) நடைபெற்றுக் கொண் டிருக்கும் ஈரான் - ஈராக் போரை நிறுத்த முடியாமையே இதற்குத் தக்க எடுத்துக் காட்டா கும், பன்னூறாயிரவர் இறந்த பின்னர் - பல்வகைப் பேரி ழப்புகள் ஏற்பட்ட பின்னர்ப் போரை நிறுத்த முயல்வது கேலிக் கூத்தாகும். குதிரை திருட்டுப் போன பின்பு கொட்டிலைப் பூட்டுவதால் பயன் என்ன?

ஒரே உலக அரசு அமையின் உலகில் போரே நடை பெறாது. எங்கேனும் நடப்பினும், அது உள்நாட்டுக் கலகமாகக் கருதப்பட்டு உடனே அடக்கப்படும். ஆனால் இந்த ஒரே உலக அரசு அமைவது இயலக் கூடியதா என்பது பற்றிப் பின்னர்த் தனித்தலைப்பின் கீழ் ஆய்ந்து

காண்போம்.

வரலாற்றுப் புகழிடம்:

சிலர் சில இடங்களைக் குறிப்பிட்டு, இவை வரலாற் றுப் புகழ் வாய்ந்த இடங்கள்’ எனக் கூறுவது உண்டு. அந்த இடங்களின் வரலாற்றைத் துருவிப் பார்ப்போமா யின், இருவேறு நாட்டினர் போரிட்டுக் கொண்டு மடிந்த இடங்களாக அவை இருக்கும். இவ்வாறு அழிவு வேலை நடந்த இடம் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இடமாகக் கருதப்பட முடியாது. ஆக்க வேலை நடைபெற்ற இடங் களே வரலாற்றுப் புகழ் மிகுந்த இடங்களாக மதிக்கப் பெறும். எனவே, உலகில் வீர யுகம் மாறி அமைதி யுகம் ஏற்பட்டுப் புதிய வரலாறு படைக்கப்பட வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/176&oldid=544832" இலிருந்து மீள்விக்கப்பட்டது