பக்கம்:உலகு உய்ய.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

வதிலேயே காலத்தையும் கவனத்தையும் முழுமையாய்ச் செலவிட வேண்டியிருக்கிறது. இதனால், அரசின் ஆக்க வேலைகள் தடைப்படுகின்றன - அல்லது - ஆமைபோல் மெல்ல நகர்கின்றன. இதனால், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைப்பதில்லை. எனவே, பல மன்னர்கள் இருந்த அந்தக் காலத்துக்கும் பல கட்சிகள் உள்ள இந்தக் காலத்துக்கும் வேற்றுமை என்ன? வரலாறு தன் anor; 305thloé &m Lo Qub” (History repeats itself) என்னும் அனுபவ மொழி இப்போது நன்கு விளங்கலாம். அன்று அரசர்கட்கிடையே போர் நடந்தது போல, இன்று அரசியல் கட்சிகட்கிடையே போரும் கலகமும் குழப்ப மும் நடந்துகொண்டிருக்கின்றன. அவ்வளவுதான் வேற்

றுமை.

உலகம் முழுவதும் ஒரே ஆட்சி முறையிருக்க வேண் டும் என்னும் கொள்கை துளிர்விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், ஒரு நாட்டில் ஒரே கட்சி ஆட்சி முறை யிருப்பது நன்றே. இவ்வாறிருந்தால், அந்நாட்டுத் தலை வர், தனிப்பெருந்தலைவராய் - சர்வாதிகாரியாய் - தட் டிக் கேட்பாரின்றிக் கொடுமைகள் இழைக்கக் கூடும் என்று பலர் அஞ்சலாம். ஒருவர் அவ்வாறு நடந்து கொண் டால், காலம் பதில் சொல்லும் - ஒரு நாளைக்குக் காலம் அவரைக் காலை வாரிவிட்டு வேறு தலைவரைக் கொண்டு வந்து நாட்டுக்குத் தரும். எனவே, இது குறித்து எவரும் அஞ்ச வேண்டா! 'ஒவ்வொரு நாடும் அவ்வக் காலத்திற் கேற்பப் பொருந்துமாறு தனக்கு உரிய தக்க தலைவரைத் G5ffị5G)3(Đg, gilớ, Q3m 6irGötb” (“A nation gets the leaderS it deserves.”) என்னும் அனுபவ மொழி இங்கே எண்ணத் தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/180&oldid=544836" இலிருந்து மீள்விக்கப்பட்டது