பக்கம்:உலகு உய்ய.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

ஒரு நாட்டில் இரண்டு கட்சிகள் இருப்பதிலும் ஒரு நன்மை உண்டு. இரண்டனுள் ஒன்று ஆளும் கட்சியாகவும் மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் மாறி மாறியிருக்கும். ஆளும் கட்சிக்கு ஒர் எதிர்க்கட்சி யிருப்பது நன்மையே யன்றித் தீமையில்லை. ஆளும் கட்சி, தான் தோன்றித் தனமாகவோ - தன்னை யறியாமலோ - தற்செயலாகவோ தவறு செய்யின், எதிர்க் கட்சி சுட்டிக் காட்டிக்கண்டிக்கும். இதனால், ஆளும்கட்சி தவறைத் திருத்திக்கொண்டு நல் லாட்சி புரிய வாய்ப்பு உண்டாகும். இடித்துக் கண்டிப்பவர் இல்லாத அரசன், கெடுக்கும் பகைவர் இல்லாமலேயே - தானே கெட்டுவிடுவான் எனத் திருவள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார்.

"இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்'. (448)

என்பது அவரது பாடல். எனவே எதிர்க்கட்சி யிருப்பது நல்லதே. இதற்காக, எதிர்க் கட்சியினர், ஏட்டிக்குப் போட்டியாக, ஆளும் கட்சியினர் செய்யும் நற்செயல்கட் குங்கூட குற்றம் கற்பித்துக் கொண்டிருப்பது குற்றமாகும். இது சில நாடுகளில் சில சமயங்களில் நடக்கிறது. இதனால் போரும் பூசலும் ஏற்படுமேயன்றி, நாட்டில் அமைதியான நல்லாட்சி நடைபெறாது.எனவே, படிப்படியாகக் கட்சி களின் எண்ணிக்கை குறைவது நல்லது.

கட்சிப் பூசலுக்குக் காரணம்:

"கயவர்களின் கடைசி புகலிடம் அரசியல்' (Politics is the last resort of Scoundrels) stor, oftāla Gupang, பெர்னாட் ஷா கூறியிருப்பதாகச் சொல்வதுண்டு. கயவர் சிலர்க்கு அரசியல் முதல் புகலிடமாகவே அமைவதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/181&oldid=544837" இலிருந்து மீள்விக்கப்பட்டது