பக்கம்:உலகு உய்ய.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

பாடம் கேட்பதில்லை; தாம் கேளாவிடினும் மற்றவர்களை யும் கேட்க விடுவதில்லை; திரையோவியக் கொட்டகை களில் கலகலப்பு (கலாட்டா) செய்வதுபோல் வகுப்பறை யிலும் செய்கின்றனர். ஆசிரியர்கள் கண்டித்தால், அவர் கட்கு அடங்காமல் எதிர்த்துக் கொள்கின்றனர். மாணாக் கர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவர்களாக ஆசி ரியர்கள் ஆகியுள்ளனர். தலைமை யாசிரியர்களாலும் இவர்களை அடக்க முடியவில்லை. யாருக்காவது தண்டனை தந்தால் மாணாக்கர் அனைவரும் சேர்ந்து கொண்டு வேலை நிறுத்தம் (strike) செய்கின்றனர். பொருள்களை அடித்து உடைத்து நொறுக்குகின்றனர்எரிக்கின்றனர். பெற்றோர்களின் ஒத்துழைப்பு பிள்ளை கட்குத்தான் கிடைக்கின்றதே தவிர, கல்வி நிறுவனத்துக்குக் கிடைப்பதாகத் தெரியவில்லை. பிள்ளைக்குத் தண்டனை தந்தால், பெற்றோர்கள் சிலர், அரசியல் வாதிகளைக் கையில் போட்டுக் கொண்டு ஆசிரியர்களை அல்லல்கட்கு உள்ளாக்குகின்றனர். பள்ளியில் இருக்க வேண்டிய ஒழுங்குக் கட்டுப்பாடு (Discipline) சீர் குலைந்து போகிறது.

அன்று ஆசிரியர்கள் அமர்ந்து பாடம் கற்பித்தனர்மாணாக்கர்கள் நின்று கொண்டு பாடம் கேட்டனர். இன்று எதிர்மாறு. அன்று ஆசிரியர்கள் மாணாக்கர்களை வைத னர்-இன்று மாணாக்கர்கள் ஆசிரியர்களை வைகின்றனர். அன்று ஆசிரியர்கள் பிள்ளைகளை அடக்கினர்-இன்று பிள் ளைகள் ஆசிரியர்களை அடக்குகின்றனர்; அன்று ஆசிரியர் கள் மாணாக்கர்களை அடித்தனர்; இன்று மாணாக்கர்கள் ஆசிரியர்கட்கு அடி உதை கொடுக்கின்றனர்; அடி உதை கொடுப்பது மட்டுந்தானா? ஆசிரியர்களைப் பழித்துச் சுவ ரில் எழுதுவதும் ஆசிரியர்கட்குக் கொடும்பாவி கட்டி

– 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/194&oldid=544850" இலிருந்து மீள்விக்கப்பட்டது