பக்கம்:உலகு உய்ய.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

இழுத்து எரிப்பதும் இயல்பாய் நடக்கின்றன. இந்நிலை யில் மாணாக்கர்களை அடக்குவது யார்? அடக்குவது எப் படி? அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்’-என்பதுபோல வெளியில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் கல்வி நிறுவனங் கட்குள்ளேயும் உள்ளன. இதற்கு மாற்று யாது?

கண்ணா? உயிரா?

மாணாக்கர்களிடத்தில் கடுமை காட்டலாமா என்று சிலர் கருதலாம். மாணாக்கர்கட்குக் கண்கள் இருக்கச் செய்ய வேண்டும்; கண்கள் போனாலும், உயிராவது இருக்கச் செய்ய வேண்டும்.

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”. (7)

என்பது ஒளவையாரின் கொன்றை வேந்தன் பாடல்.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு”. (392)

'கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்”. (393)

என்பன திருக்குறள் பாடல்கள். இவற்றால், கல்வி கண்

போன்றது என்னும் கருத்து பெறப்படுகிறது.

'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஒம்பப் படும்”. (131)

என்னும் திருக்குறள் பாடலால், ஒழுக்கம் உயிரினும் சிறந் தது என்பது பெறப்படும். எனவே, கல்வியாகிய கண் இன்றியமையாததா? ஒழுக்கமாகிய உயிர் இன்றியமையா ததா? கண் இல்லாமல் வாழ முடியும்; உயிர் இல்லாமல் வாழ முடியாதே! எனவே, ஒருவர்க்குக் கல்வி இல்லாவிடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/195&oldid=544851" இலிருந்து மீள்விக்கப்பட்டது