பக்கம்:உலகு உய்ய.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மக்கள் தொகைக் கட்டுப்பாடு

இந்த உலகமே தேவையில்லாதது - என்ற அடிப்படை யில் நோக்குங்கால், உலகில் மக்கள்தொகை பெருக வேண்டியதில்லை - குறையலாம் - குறைந்துகொண்டே போகலாம் என்னும் செய்தி தானே பெறப்படும். உண்டாகி விட்ட உலகத்தில் தோன்றிவிட்ட மக்கள் இனத்தை அறவே அழிக்க முடியாது. அப்படியே ஏதோ ஒர் ஆற் றல் அழித்தாலும், மக்கள் இனம் தோன்றுவதற்குத் தொடக்கத்தில் எது காரணமாயிருந்ததோ - அந்தக் கார ணம் மீண்டும் மக்கள் இனத்தை உண்டாக்கிவிடும். எனவே, மக்கள் இனத்தைப் பெருக்குவதை நிறுத்திக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுதலே இன்று வேண்டற்

பாலது.

நாடும் வீடும்:

இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. சில நாடுகட்கு மக்கள் பெருக்கம் தேவைப்படுகிறது; சில நாடுகட்கு மக் கள் குறைப்பு தேவைப்படுகிறது. ஒரு நாட்டிலேயே ஒரு சிலர் மக்கள் பிறப்பைக் குறைக்கக் கூடாது என்கின்றனர்; வேறு சிலர் குறைக்கவேண்டும் என்கின்றனர். இது தொடர்பாக, சமய வாதிகட்கும் சமூகச் சீர்திருத்தக்காரர் கட்கும் இடையே நிரம்பக் கருத்து வேறுபாடு உண்டு.

உலகில் மக்கள் தொகை குறைய வேண்டுமென்றால், நாடுகளில் மக்கள் தொகை குறையவேண்டும் என்பது பொருளாகும்; நாடுகளில் குறைய வேண்டும் என்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/20&oldid=544678" இலிருந்து மீள்விக்கப்பட்டது