பக்கம்:உலகு உய்ய.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

வீடுகளில் மக்கள் பயிர் குறையவேண்டும் என்பது பொரு ளாகும். குறைந்த மக்களும் நிறைந்த செல்வமும் உள்ள நாடுகளில் வாழ்க்கை வளமாக உள்ளது; இத்தகைய நாட் டினர்க்கு இதுபற்றிக் கவலை யில்லாமல் இருக்கலாம். நிறைந்த மக்களும் குறைந்த செல்வமும் உள்ள நாடுகளில் வாழ்க்கை வறுமையால் வரண்டு கிடக்கின்றது; இத்தகைய நாட்டினர்க்கு இதுபற்றிக்கவலைப்பட வேண்டியுள்ளது. மக்கள் தொகையைக் குறைப்பது, கடவுள் தலையில் கையை வைப்பதாகும் - அதனால் தங்கள் பிடிப்பு போய்விடும் எனச் சமயவாதிகள் அஞ்சுகின்றனர். வாழ்க்கை வளம் பெற வேண்டுமே எனச் சீர்திருத்தவாதிகளும் அரசியல் தலைவர்களும் கவலையுற்றுக் கதறுகின்றனர். மாறுபட்ட இந்தச் சிக்கல்கட்குத் தீர்வு காணவேண்டும்.

மக்கள்பேறு:

பேறு என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பெரிய செல் வம், பெரிய வாய்ப்பு, பெரிய பாக்கியம் என்றெல்லாம் பொருள் உண்டு. இந்தச் சொல்லுக்கு இந்தப் பொருள் எவ்வாறு கிடைத்தது? மக்கள் (குழந்தைகள்) பெரிய செல்வமாகப் பண்டு கருதப்பட்டனர். அவர்களைப் பெறு வது (அடைவது) பெரிய வாய்ப்பாக - பெரிய பாக்கியமா கக் கருதப்பட்டது. எனவே, இதற்கு மக்கள் பேறு என் னும் பெயர் வழங்கப்படலாயிற்று. இவ்வாறு சிறப்புப் பெயராக உருவெடுத்த பேறு என்னும் சொல், பிற்கா லத்தில் எல்லா வகையான வாய்ப்பு வசதிகட்கும் பொது" பெயராகிவிட்டது. இதற்கு எடுத்துக்காட்டாக, வீடு பேறு (மோட்சம்) என்னும் ஒன்று போதாதா? இதனால் அறியப்படுவதாவது; பண்டைக் காலத்தில் குழந்தைக ளைப் பெரிய செல்வமாகக் கருதினர் என்பதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/21&oldid=544679" இலிருந்து மீள்விக்கப்பட்டது