பக்கம்:உலகு உய்ய.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

திருவள்ளுவர் தமது திருக்குறள் நூலில் மக்கள் பேறு' என்னும் தலைப்பில் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். ஈண்டு மக்கள் என்பது குழந்தைகளைக் குறிக்கும். வள்ளு வர் கூறுவன: பேறுகளுக்குள் சிறந்தது மக்கள் பேறுதா னாம். மக்களே சிறந்த செல்வமாம். குழந்தைகளின் கை பட்ட உணவு அமிழ்தினும் இனியதாம்; பிள்ளைகளின் உடலைத் தொடுதல் பெற்றோர் உடலுக்கு இன்பமாம்; அவர்தம் சொல் செவிக்கு இன்பமாம். தம் குழந்தைகளின் சொற்களைக் கேளாதவர்களே குழலும் யாழும் இனியன என்பார்களாம். இவற்றைக் கூறிய வள்ளுவர் பெற்றோ ரின் கடமையையும் பிள்ளைகளின் கடமையையும் கூறவும் மறந்தாரிலர். கூரைமேல் ஏறிக் கொள்ளி வைக்கும் பிள்ளை யைச் சிறந்த பேறாக ஆசிரியர் குறிப்பிடவில்லை. அறிவு அறிந்த - நல்லறிவு மிக்க மக்களையே சிறந்த பேறாகக் கூறியுள்ளார். அங்ங்னமெனில், மக்களை அறிவிற் சிறந்தவர் களாக உருவாக்கி வளர்க்கவேண்டும் என்னும் பெற்றோ ரின் பொறுப்பும் இதில் அடங்கியுள்ளது.

'பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கள்பேறு அல்ல பிற”. (6.1)

என்பது திருக்குறள் பாடல். புறநானூற்றுச் சுவையான செய்தி யொன்று காண்போமே.

'மாபெருஞ் செல்வராயினும், குறுகுறு என நடந்தும் சிறிய கையை நீட்டி உணவில் இட்டும் தொட்டும் துழாவி யும் வாயால் கவ்வியும் நெய்ச்சோற்றை உடம்பின்மேல் சிந்தியும் சிதறியும் மனத்தை மயக்கிக் கவரும் குழந்தைக ளைப் பெறாதார்க்கு வாழ்நாள் பயன் அற்றதாகும்’-என் பது, பாண்டியன் அறிவுடை நம்பி என்னும் பாண்டிய மன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/22&oldid=544680" இலிருந்து மீள்விக்கப்பட்டது